எதிர்காலத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக மாற தகுதியுள்ள தற்போதைய 5 கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்களாக மாறுவது வழக்கமான விஷயமாகி விட்டது.பல்வேறு முன்னனி கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற பின்பு வர்ணனையாளர்களாக மாறி சிறப்பாக அப்பணியை செய்து வருகின்றனர். அப்படி வர்ணனையாளர்களாக மாறிய சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், மைக்கேல் ஹோல்டிங், நாசர் உசேன், ரவி சாஸ்திரி ஆவர்.அதுபோல தற்போதைய தலைமுறை கிரிக்கெட் வீரர்களிலிருந்து எதிர்கால வர்ணனையாளர்களாக யார் வர முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1.ரவி அஸ்வின்

- Advertisement -

ஒரு நல்ல வர்ணனையாளராக இருக்க ரசிகர்கள் தேடும் விஷயங்களில் ஒன்று, கிரிக்கெட் பற்றிய அறிவு. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவரது அறிவு மிக விரிவானது மற்றும் அவர் பேசும் விதமே கிரிக்கெட்டைப் பற்றி அவர் எவ்வளவு தெரிந்து வைத்துள்ளார் என்பதைக் கூறிவிடும். அதற்கு மேல், அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களை யாரும் புறக்கணித்திருக்க முடியாது. இரு தளங்களிலும் தனது சொந்த சேனலைக் கொண்டுள்ளார், மேலும் அவர் அதில் பல கிரிககெட் வீரர்களை பேட்டி எடுத்து வருகிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அவரது சமீபத்திய பேட்டி தொகுப்பான ‘ஒரு குட்டி கதையைச் சொல்கிறேன்’ நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது.

தற்போதைய தலைமுறை கிரிக்கெட் வீரர்களைச் சேர்ந்த ஒருவர் வர்ணனையாளராக மாற வேண்டுமானால் அது அஸ்வின் தான். அவருக்கு கிரிக்கெட் குறித்த அறிவு இருக்கிறது. புகழ்பெற்ற இந்திய வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூட ட்விட்டரில், அஸ்வின் வர்ணனையாளராக மாறினால் வரலாற்றில் ஒரு பெரிய பெயரை சம்பாரிப்பார் என்று நினைக்கிறேன் , என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Chahal

2.யுஸ்வேந்திர சஹால்

யுஸ்வேந்திர சஹால் இப்போது உலகின் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவர்.அது தவிர சதுரங்க விளையாட்டில் அவர் சிறப்பான வீரரும் கூட. மேலும் இந்திய அணியில் மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் சாஹல் ஒருவர். அவர் ஒரு முழுமையான சமூக வலைதள ஆர்வலராக இருந்து வருகிறார். குறிப்பாக , கொரோனா லாக்டவுன் காலத்தில நாம்அனைவரும் சாஹலின் பல சேட்டைகளைக் கண்டோம்.

- Advertisement -

சஹால் ஒரு நல்ல வர்ணனையாளராக இருக்க முடியும் என்பதற்கான ஒரு முக்கிய காரணம், அவர் ஒரு நல்ல தொகுப்பாளராக இருப்பார் என்பதே. பி.சி.சி.ஐ.யின் இணையதளத்தில் காணப்படும் பிரபலமான ‘சாஹல் டிவி’ நிகழ்ச்சியை நாம் அனைவரும் அறிவோம். அந்நிகழ்ச்சியில், சாஹல் பல கிரிக்கெட் வீரர்களை பேட்டி எடுத்துள்ளார்.

கேமரா மீதான அவரது நம்பிக்கையும், அவரது நகைச்சுவைகளும் , வேடிக்கையான அவரது பேச்சும் அவரை ஒரு நல்ல வர்ணனையாளராக்க முடியும். ஏனெனில் ரசிகர்கள் அவரது பேச்சை கேட்டு மகிழ்வார்கள். எனவே அவர் ஒரு சிறந்த வர்ணனையாளராக நிச்சயம் வருவார் என்பதே நிதர்சனமான உண்மை.

- Advertisement -

Warner

3.டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் களத்தில் சிறந்த நடிகராக இருந்து வருகிறார். மேலும் அதில் அவர் தனது ரசிகர்களுடன் உரையாடுவதிலும் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார். ஒரு கிரிக்கெட் வீரர் வர்ணனையாளராக மாற தேவைப்படும் ஒரு விஷயம் நம்பிக்கை. அது டேவிட் வார்னருக்கு நிறைய இருக்கிறது என்றே நாம் கூறலாம். இன்ஸ்டாகிராமில் வார்னர் மேலும் நல்ல நகைச்சுவைகளை சில மாதங்களாக செய்து வருகிறார். மேலும் விளையாட்டை நன்றாக புரிந்தும் வைத்து இருக்கிறார். எனவே வார்னர் கிரிக்கெட் வர்ணனைக்கு ஏற்றவர் ஆவார்.

rahul

4.கே.எல்.ராகுல்

ராகுலின் பேட்டிங் திறன், சிறந்த விக்கெட் கீப்பிங் அவரை இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் நிரந்தர வீரராக்கியுள்ளது. ஐ.பி.எல் 2018 இறுதிப் போட்டியின் போது கே.எல்.ராகுல் வர்ணனை தொகுப்பில் காணப்பட்டார்.அதில் அவர் ரன்பீர் கபூருடன் வர்ணனை செய்தார். ராகுலின் குரல் கேட்க மிகவும் இனிமையானதாக இருக்கும். அவர் தனது கிரிக்கெட்டைப் பற்றி அல்லது வேறு எவரையும் பற்றி பேசும் விதத்தில் எப்போதும் மிகவும் கவனமாக இருப்பார். இந்த காரணங்கள் அனைத்தும் அவர் எதிர்காலத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் ஒரு சிறந்த வர்ணனையாளராக மாறிவிடுவார் என்றே குறிப்பிட்டு காட்டுகிறது.

Neesham

5.ஜேம்ஸ் நீஷம்

தற்போதைய கிரிக்கெட் வீரர்களிடையே மிகவும் சுறுசுறுப்பான மற்றும் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பயண்படுவதில் நீஷம் கெட்டிக்காரர்.டிவிட்டரில் பல ட்வீட்களை அவர் அடிக்கடி போட்டு தனது நகைச்சுவையை திறனை பல நாட்களாக காண்பித்து வருகிறார். டிவிட்டர் மன்னன் வீரேந்தர் சேவாக் போல் எடுத்துக்காட்டுக்கு ஒரு வீரரரை நாம் தேடி சென்றால், அதில் நீஷமே தென்படுவார்.

அவர் ஒரு வர்ணனையாளராக ஆனால் நிச்சயம் சேவாக் போல தனது நகைச்சுவையின் மூலம் போட்டியை நல்ல சுவரசியமாக எடுத்து செல்வார். கிரிக்கெட் பற்றிய கவனிப்பு திறனும் சில நேரங்களில் அவரது ட்வீட்களில் தெரியும்.இவை அனைத்தும் அவரை ஒரு நல்ல வர்ணனையாளராக மாற்றும் என நாம் நம்பலாம்.

Advertisement