ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது மட்டுமின்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Ashwin
- Advertisement -

கிரிக்கெட் பொருத்தவரை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதை விட டெஸ்ட் தொடர் விளையாடுவது மிகவும் கடினமானது. இந்த கடினமான டெஸ்ட் தொடரிலும் கூட கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு வித்தியாசமான சாதனைகளை படைத்து வருகின்றனர். அவ்வாறு தற்போது ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி 5 விக்கெட் மேல் வீழ்த்திய ஆல்ரவுண்டர் குறித்து பார்ப்போம்.

ashwin 1

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் :

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை 2016ம் ஆண்டு படைத்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 566 ரன்கள் எடுத்தது. இதில் அஸ்வின் 113 ரன்களையும் விராட் கோலி இரட்டை சதமும் விளாசி இருந்தனர். இதில் இந்திய அணி 92 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தனது பந்து வீச்சில் 7-83 பெற்றிருந்தார்.

botham

சர் இயன் போத்தம் :

- Advertisement -

1981 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 3 வது டெஸ்டின் போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டரான போத்தம் இந்த சாதனையை நிகழ்த்தினார். போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 401 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் போத்தம் பேட்டிங்கில் 149 ரன்களையும் பந்துவீச்சில் 6-95 என தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கண்டது.

chase

ரோஸ்டன் சேஸ் :

- Advertisement -

2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியின்போது தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக ரோஸ்டன் சேஸ் இந்த சாதனையை படைத்திருக்கிறார். இந்த போட்டியில் ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் 5-121 எனவும் பேட்டிங்கில் 137 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருந்தார்.

Kallis

ஜாக் காலிஸ் :

- Advertisement -

1999 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இந்திய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் ஜாம்பவானான ஜாக் காலிஸ் இந்த சாதனையை படைத்து இருக்கிறார். இந்த போட்டியில் ஜாக் காலிஸ் 110 ரன்களைக் குவித்துள்ளார். இதை தொடர்ந்து தனது பந்துவீச்சில் 5 விக்கெட்களை வீழ்த்தி 90 ரன்களை விட்டுக் கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

imran

இம்ரான் கான் :

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் 1982-83ல் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3வது டெஸ்ட் போட்டியில் இம்ரான் கான் இந்த மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார். இந்த போட்டியில் இம்ரான் கான் 117 ரன்களைக் குவித்துள்ளார். இதை தொடர்ந்து தனது பந்துவீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தி 98 ரன்களை விட்டுக் கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

Advertisement