காயம் காரணமாக குறுகிய காலத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்ட 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Kieswetter-1
- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் தங்களது நாட்டிற்காக அறிமுகமாகி விளையாடும் போது பல ஆண்டுகாலம் விளையாட வேண்டும் என்று நினைத்து தான் விளையாடுவார்கள். ஆனால் ஒரு சில விஷயங்கள் அப்படி விளையாடும் கிரிக்கெட் வீரர்களை திடீரென பாதியிலேயே கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது வேலைக்கு செல்லும் அளவிற்கு தள்ளிவிடுகிறது. அப்படி திறமை இருந்தும் இளமையிலேயே திடீரென கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டு வெளியேறிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.,

James

- Advertisement -

ஜேம்ஸ் டைலர் (இங்கிலாந்து) – இதயத்தில் பிரச்சனை :

2011ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானவர் ஜேம்ஸ் டைலர். 27 ஒருநாள் போட்டிகளில் ஆடி சராசரியாக 42 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு தனது 28 வயதில் தனது இதயத்தில் பிரச்சனை இருப்பதன் காரணமாக இளமையிலேயே கனத்த இதயத்துடன் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்து கிரிக்கெட்டிலிருந்து வெளியேறினார்.

harris

ரியான் ஹாரிஸ் (ஆஸ்திரேலியா) – முழங்கால் காயம் :

- Advertisement -

30 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ரியான் ஹாரிஸ். ஆஸ்திரேலிய அணிக்காக பல போட்டிகளில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றி பெற வைத்திருந்தார். வேறு வழியில்லாமல் அவ்வப்போது விளையாடிக் கொண்டிருந்த இவர் குறுகிய காலத்திலேயே ஓய்வுபெற்ற வெளியேறிவிட்டார்.

Rayudu

அம்பத்தி ராயுடு (இந்தியா) – சக மனிதர்களிடம் இருந்த மோசமான அணுகுமுறை :

- Advertisement -

அம்பத்தி ராயுடு இந்திய அணியின் மிகச்சிறந்த வீரராக இருந்தார். இவருக்கு இந்திய அணியில் பெரிதாக இடம் கிடைக்கவில்லை என்றாலும் உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டிருந்தார். 2013ஆம் ஆண்டு இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. விளையாடிய போட்டியில் எல்லாம் நன்றாக விளையாடிய இவர் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 40 ரன் அடித்து இருக்கிறார். சக மனிதர்களிடம் இவர் சரியாக பழகாததால் இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு வேட்டு வைத்துவிட்டது. இதன் காரணமாக திறமையிருந்தும் இவரை அணியில் சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் தயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

kieswetter

கிரெய்க் கெய்ஸ்வெட்டர் (இங்கிலாந்து) – மூக்கு எலும்பு முறிவு :

- Advertisement -

இவர் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்தவர் 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கும் அணிக்காக அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற போது அந்த அணியில் இருந்து மிகப்பெரிய பங்களிப்பை அளித்து அதன் பின்னர் ஒரு சாலை விபத்தில் இவருக்கு அடிபட்டு மூக்கு எலும்பு முறிந்துவிட்டது. இதன் காரணமாக மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அவரது கண்களில் பார்வை குறைபாடும் ஏற்பட்டது. இதன் காரணமாக 27 வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து வெளியேறினார்.

nari

நாரி கான்ட்ராக்டர் (இந்தியா) – மண்டை ஓடு எலும்பு முறிவு :

இந்திய கிரிக்கெட்டின் ஆரம்பகாலத்தில் விளையாடிய இவர் இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். 21 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இரண்டு சதங்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்திருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் இவரது தலையில் வீசப்பட்ட பந்து அவரது மண்டை ஓட்டு எலும்பை உடைத்து. இதன் காரணமாக உடனடியாக ஓய்வை அறிவித்து கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார்.

Advertisement