வாய்ப்பு கிடைக்காமல் நாடு விட்டு நாடு மாறிய 5 பிரபல கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

morkel
- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தனது நாட்டிற்காக விளையாட வேண்டும என்பதையே இலட்சியமாக கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களிடம் திறமை இருந்தும் தங்களது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காததால் பல வீரர்கள் வேறு நாட்டிற்காக விளையாடி வருகிறார்கள். அவ்வாறு தன் நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் வேறு நாட்டிற்கு விளையாடி வரும் 5 வீரர்களை பற்றி காண்போம்.

morkel 1

- Advertisement -

மோர்னே மோர்கல் :

மோர்ன் மோர்கல், தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய பந்து வீச்சாளர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக 247 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். மோர்கல் 544 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அவற்றில் 309 டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்தது. இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். ஆஸ்திரேலிய விளையாட்டு ஒளிபரப்பாளரான ரோஸ் கெல்லியை மோர்கல் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனால், அவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடிமகனாக இந்த வாய்ப்பை பெற்றார்.

Corey

கோரி ஆண்டர்சன் :

- Advertisement -

கோரே ஆண்டர்சன் நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆவார். இவரது பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் நியூசிலாந்து அணி பலமுறை வெற்றியை கண்டுள்ளது. இருப்பினும் இவருக்கு நியூஸிலாந்து அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் இவர் நியூஸிலாந்து கிரிக்கெட்டில் இருந்து விலகி மூன்று வருடத்திற்கு அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். அவரது வருங்கால மனைவி மேரி மார்கரெட் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anshuman 1

அன்ஷுமான் ராத் :

- Advertisement -

அன்ஷுமான் ராத், ஆங்காங் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தனது அணிக்காக 38 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் 138 பந்துகளில் 143 ரன்களை குவித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். இதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஆசிய உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இவர் 73 ரன்களை குவித்துள்ளார். இவர் இந்தியாவில் விளையாட முடிவு செய்தார். இவர் இந்தியர் என்றும் அவர் நாக்பூரில் வசித்து வருவதாகவும் அறிவித்தார். இதன்பிறகு இவர் இந்திய உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

qadir

உஸ்மான் காதிர் :

- Advertisement -

உஸ்மான் காதிர், பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஜிம்பாவே அணிக்கு எதிராக டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகினார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தனது முதல் 3 டி20 தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் பிறகு இவர் ஆஸ்திரேலியாவின் சர்வதேச அணியில் விளையாட விரும்பினார். ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் பெர்ரி உஸ்மான் காதிரை ஆஸ்திரேலிய அணிக்கு வர தூண்டினார். இதன்பிறகு காதிர் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அவர் பிக் பாஸ் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தத்தையும் பெற்றார். ஆனால் அவர் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இணைந்துள்ளார்.

aslam

சமி அஸ்லம் :

பாகிஸ்தான் முன்னாள் டெஸ்ட் தொடக்க வீரர் சாமி அஸ்லம் 13 டெஸ்ட் போட்டிகளிலும் 4 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் ஏழு அரைசதம் உள்பட 758 டெஸ்ட் ரன்களை குவித்துள்ளார். 2017 இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தேர்வாளர்கள் இவரைத் தேர்ந்தெடுக்க வில்லை. இந்நிலையில் அமெரிக்கா சென்று கிரிக்கெட் விளையாடுவதாக இவர் அறிவித்திருந்தார். காயிட்-இ-அசாம் கோப்பையின் 2020 சீசனில் சாமி அஸ்லம் விளையாடு போவதாக கூறியுள்ளார். கூடிய விரைவில் அமெரிக்கா ஜெர்சியில் இவரை பார்க்க முடியும்.

Advertisement