அருமையான டேலன்ட் இருந்தும் அணிக்குள் ஏற்பட்ட பாலிடிக்ஸ்ஸால் ஓய்வை அறிவித்த 5 சிறப்பான வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

கிரிக்கெட்டில் இளம் வயதில் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பல வீரர்கள், வயது சென்ற பின் அதே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இறுதியில் தங்களது ஓய்வு முடிவை அறிவித்து இருக்கின்றனர். ஆனால் இதற்குமாறாக வயது சென்ற பின்னரும் தங்களுடைய திறமையை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், அரசியல் காரணங்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் காரணமாக வலுக்கட்டாயமாக சில வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை அறிவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . இந்த பதிவில் அதுபோன்ற ஐந்து வீரர்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

Katich

- Advertisement -

சைமன் கேட்டிச்:

2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான இவருக்கு முதல் ஆறு வருடங்கள் அந்த அணியில் நிரந்தர இடம் வழங்கப்படவில்லை. மேத்யூ ஹைடன் ஓய்வுக்குப் பிறகு, டாப் ஆர்டரில் விளையாட சைமன் கேடிச்சுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் முதல் 16 இன்னிங்சுகளிலேயே 6 சதங்கள் அடித்து அசத்தினார். 2009ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மைக்கேல் க்ளார்க்குடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் கைகலப்பில் ஈடுபட்ட அவருக்கு அதற்குப் பிறகு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை. 2011ஆம் ஆண்டு இளம் வீரர்களை அணியில் இணைக்கும் முடிவை ஆஸ்திரேலியா எடுப்பதாக கூறி இவரை அணியிலிருந்து விலக்கியது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம்.

Rayudu

அம்பத்தி ராயுடு:

- Advertisement -

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பானது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அம்பத்தி ராயுடு, இந்திய தேர்வுக் குழுவை வெளிப்படையாகவே விமர்ச்சித்தார். மேலும் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறுவதாகவும் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு பிறகு தனது ஓய்வு முடிவை திரும்பெற்றுக் கொண்ட அவர், தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஹென்றி ஹோலங்கா மற்றும் ஆண்டி ப்ளவர்:

- Advertisement -

2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்று அசத்தியது ஜிம்பாப்வே அணி. அதற்கு மிக முக்கிய காரணமாக அந்த அணியின் பேட்ஸ்மேனான ஆண்டி ஃப்ளவரும், பௌலரான ஹென்றி ஹோலாங்காவும் திகழ்ந்தனர். அந்த உலக கோப்பை தொடருக்குப் பிறகு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்குள் நிற வெறி நிலவுவதாகவும் அதற்கு அந்நாட்டின் அதிபர்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர் இந்த இருவரும். அந்த நாட்டின் அதிபருக்கு எதிராக குற்றம் சாட்டியதால், இந்த இருவரும் சிறப்பான ஃபார்மில் இருந்தபோதும்கூட அணியிலுருந்து வலுக்கட்டாயமாக ஓய்வு பெற நிர்பந்திக்கப்பட்டனர்.

Pieterson

கெவின் பீட்டர்சன்:

- Advertisement -

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக திகழ்ந்த கெவின் பீட்டர்சன், 2012ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த தொடருக்கு இடையில் தென் ஆப்ரிக்க அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு இவர் செல்போன் மூலம் மெசேஜ் செய்திருந்தார். அந்த மெசேஜில் இங்கிலாந்து அணி வீரர்கள் குறித்த தகவல்களை தென் ஆப்ரிக்க வீரர்களிடம் பகிர்ந்து கொண்டார் என அவரின் மேல் குற்றம்சாட்டி, அவரை அந்த தொடரில் இருந்து நீக்கியது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம். அதற்குப் பிறகு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காமல் தவித்து வந்த அவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

Ganguly

சவுரவ் கங்குலி:

2005ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட க்ரேக் சேப்பலுக்கு சவுரவ் கங்குலியை பிடிக்காமல் போனதால் கங்குலியை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது இந்திய தேர்வுக்குழு. ஒரு வருடம் கழித்து இந்திய அணிக்கு மீண்டு வந்த கங்குலி தனது பழைய ஆட்டத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஆனால் இந்த முறை இந்திய தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த திலீப் வெங்சர்க்காருக்கு கங்குலியை பிடிக்காமல் போனது. இதனால் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய இந்தியா டெஸ்ட் தொடருக்குப் பின்பு திடீரென்று தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார் கங்குலி. அவர் கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய தொடரில் 54 என்ற அபார அவரேஜில் 324 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement