- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தனித்துவமான தல தோனி.. ஆசியக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான டாப் 5 கேப்டன்களின் பட்டியல்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் அத்தொடர் 20 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது. அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி ஆசிய சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் தயாராகியுள்ளன.

இந்நிலையில் ஆசியக் கோப்பையில் அதிக வெற்றிகளைப் பெற்ற டாப் 5 கேப்டன்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
1. எம்எஸ் தோனி: உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள தோனி ஆசிய கோப்பையில் 19 போட்டியில் இந்தியாவை தலைமைத் தாங்கியுள்ளார்.

- Advertisement -

தனித்துவமான தல தோனி:

அதில் 14 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள அவர் ஆசியக் கோப்பையில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் ஆசியக் கோப்பையை ஒருநாள் (2010இல்) மற்றும் டி20 (2016) ஆகிய 2 வகையான ஃபார்மெட்டிலும் வென்ற ஒரே கேப்டன் என்ற தனித்துவ சாதனையையும் சாதனை படைத்துள்ளார்.

2. ரோஹித் சர்மா: 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வென்றுள்ள ரோஹித் ஆசியக் கோப்பையில் 15 போட்டிகளில் கேப்டனாக இந்தியாவை தலைமைத் தாங்கியுள்ளார். அதில் 9 வெற்றிகளைப் பெற்று இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ள அவர் 2018, 2023 ஆசியக் கோப்பைகளை வென்றதை மறக்க முடியாது.
3. தசுன் சனாக்கா: இலங்கை அணியை சனாக்கா ஆசியக் கோப்பையில் 12 போட்டிகளில் வழி நடத்தியுள்ளார்.

- Advertisement -

டாப் 5 கேப்டன்கள்:

அதில் 9 வெற்றிகளைப் பெற்றுள்ள அவர் இந்தப் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து ஆசியக் கோப்பையில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கை கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவருடைய தலைமையில் 2022 ஆசியக் கோப்பையை இலங்கை வென்றது.
4. அர்ஜுனா ரணதுங்கா: 1996 உலகக்கோப்பையை கேப்டனாக வென்ற இவரது தலைமையில் ஆசியக் கோப்பையிலும் இலங்கை அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் இப்படி விளையாடுன எந்தவொரு மேட்ச்லயும் இந்திய அணி தோற்றது இல்லையாம் – வெளியான தகவல்

அவருடைய தலைமையில் ஆசியக் கோப்பையில் இலங்கை மொத்தம் 13 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் இப்பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ள ரணதுங்கா தலைமையில் 1997 ஆசியக் கோப்பையை இலங்கை வென்றது.
5. மிஸ்பா-உல்-ஹக்: பாகிஸ்தானை அணியை ஆசியக் கோப்பையில் 10 போட்டிகளில் வழி நடத்திய மிஸ்பா 7 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அதனால் இந்தப் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள அவரது தலைமையில் பாகிஸ்தான் 2012 ஆசியக் கோப்பையை வென்றது.

- Advertisement -