சஞ்சு சாம்சன் இப்படி விளையாடுன எந்தவொரு மேட்ச்லயும் இந்திய அணி தோற்றது இல்லையாம் – வெளியான தகவல்

Sanju Samson
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், நட்சத்திர ஆட்டக்காரருமான சஞ்சு சாம்சன் கடந்த 2015 ஆம் ஆண்டே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் நிலையான இடத்தினை பிடித்து விளையாடுகிறார். தன்னிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ற அளவிலான வாய்ப்பினை பெறாத சஞ்சு சாம்சனுக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் கடந்த சில ஆண்டுகளாக தான் நிரந்தர துவக்க வீரருக்கான இடம் கிடைத்தது.

சஞ்சு சாம்சன் வைத்திருக்கும் தனித்துவமான சாதனை :

அப்படி டி20 போட்டிகளுக்கான துவக்க வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தினார். அந்த வகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 111 ரன்களை விளாசிய அவர் அதற்கடுத்த போட்டியிலேயே தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 107 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு 2025 ஆசிய கோப்பை அணியிலும் இடம் கிடைத்துள்ளது. ஆனால் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர்கான இந்திய அணியில் சுப்மன் கில் மீண்டும் இடம்பிடித்துள்ளதால் அவர் துவக்க வீரருக்கான இடத்திலிருந்து கழட்டி விடப்படலாம் என்றும் பிளேயிங் லெவனில் இருந்தும் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் தன் வசம் வைத்திருக்கும் ஒரு தனித்துவமான சாதனை குறித்து விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் இதுவரை இந்திய அணிக்காக மூன்று முறை சதம் மற்றும் இரண்டு முறை அரைசதம் என 50+ ரன்களை ஐந்து முறை அடித்துள்ளார்.

- Advertisement -

இப்படி ஐந்து முறை அவர் 50-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தபோது இந்திய அணி தோல்வியையே சந்தித்ததில்லை. அதனால் சஞ்சு சாம்சன் எப்போதெல்லாம் 50+ ரன்கள் அடிக்கிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணி டி20 போட்டிகளில் வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது என புள்ளி விவரம் கூறுகிறது.

இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு விரைவில் கிடைக்கப்போகும் பதவி.. முடிவுக்கு வரும் ரோஹித்தின் சகாப்தம் – விவரம் இதோ

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும் அவருடைய இடம் குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement