ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 5 பவுலர்கள் – அசத்தல் லிஸ்ட் இதோ

Bowlers-ipl

ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களால் உருவானது. பல சிக்சர்களும், பல சதங்களும் அடிக்கப்பட்டது. அப்படி இருந்தும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். அப்படி ஐபிஎல் தொடரில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ள பந்துவீச்சாளர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Harbhajan

ஹர்பஜன்சிங் :

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 வருடமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2 வருடமும் ஆடிய மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இவர். 160 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 150 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும் 1 முறை 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Mishra

அமித் மிஸ்ரா :

- Advertisement -

இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். 148 போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரும் ஒரு முறை ஐந்து விக்கெட்டுகள் இருக்கிறார்.

malinga

லசித் மலிங்கா :

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய இவர் மொத்தம் 170 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும் இவரும் ஒரு முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Faulkner

ஜேம்ஸ் பாக்னர் :

ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆக இருந்த இவர் ஐபிஎல் தொடரிலும் 59 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் மேலும் இரண்டு முறை 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.

unadkat

ஜெயதேவ் உனட்கட் :

ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் இவர். 73 போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.