சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 5 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Lee
- Advertisement -

ஒரு காலத்தில் எல்லாம் ஒரு நாள் போட்டிகளில் ஒன்று இரண்டு விக்கட்டுகளை வீழ்த்துவதே சிரமமாக இருந்தது. அப்படியிருந்தும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பல வீரர்கள் அசத்தியுள்ளனர். அப்படி அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Malinga

- Advertisement -

லசித் மலிங்கா :

இலங்கை அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர். 204 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழுமுறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார் அதிகபட்சமாக 38 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை போட்டியில் வீழ்த்தி இருக்கிறார்.

சாகித் அப்ரிடி :

- Advertisement -

இவர் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 395 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் ஒன்பது முறை ஐந்து விக்கெட்டுகள் இவரால் வீழ்த்தப்பட்டு உள்ளது.

Lee

பிரட் லீ :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் இவர் 221 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மொத்தம் 350 விக்கெட்டுகள் சாய்த்து உள்ளார்.

Muralitharan

முத்தையா முரளிதரன் :

- Advertisement -

கிரிக்கெட் உலகில் நாம் பார்த்த மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் இலங்கை அணிக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Younis

வக்கார் யூனிஸ் :

பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இவர் 262 போட்டிகளில் விளையாடி 416 விக்கெட்டுகள் வீழ்த்தியதுமட்டுமல்லாமல் 13 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Advertisement