ஐ.பி.எல் வரலாற்றில் அதிக மெய்டன்களை வீசிய 5 அசத்தல் பந்துவீச்சாளர்கள் – லிஸ்ட் இதோ

Russell

ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் பவுண்டரி இல்லாமல் வீசுவதே கடினமானது. அப்படி இருந்தும் பல பந்துவீச்சாளர்கள் அதிக மெய்டன் ஓவர் வீசி இருக்கிறார்கள். அப்படி அதிக மெய்டன் ஓவர்கள் உள்ள வீரர்களின் பட்டியலை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

சந்தீப் ஷர்மா – 8 :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கடந்த 6 வருடங்களாக விளையாடி வருகிறார் 79 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 98 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், 8 மெய்டன் ஓவர்கள் வீசி இருக்கிறார்.

dawal

தவால் குல்கர்னி – 8 :

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடியுள்ள இவர் 90 போட்டிகளில் விளையாடி 8 மெய்டன் ஓவர்கள் வீசியிருக்கிறார்.

malinga

லசித் மலிங்கா -8 :

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிய இவர் மொத்தம் 170 விக்கெட்டுகள் வீழ்த்தியடன் 8 மெய்டன் ஓவர்கள் வீசி இருக்கிறார்

dhonipathan

இர்பான் பதான் – 10 :

கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி உள்ள இவர் ஐபிஎல் தொடரில் 109 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 10 மெய்டன் ஓவர்கள் வீசி இருக்கிறார்.

Praveen-Kumar

பிரவீன் குமார் -14 :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் என்று பல அணிகளுக்காக விளையாடியுள்ள இவர் மொத்தம் 14 மெய்டன் ஓவர்கள் வீசி இருக்கிறார் என்பதும் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்களை வீசியவர் என்ற சாதனையை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.