ஓப்பனிங் பேட்டிங் செய்யும் வாய்ப்பும் திறமையும் உள்ள 5 பவுலர்ஸ் – லிஸ்ட் இதோ

Rashid

ஐபிஎல் தொடர் என்பது மிகப்பெரிய ஒரு பரிசோதனை களமாக இருந்து வருகிறது. திடீரென யாரும் எதிர்பாராத வகையில் பல புதிய முடிவுகளை பல அணிகளின் கேப்டன்கள் எடுத்திருக்கின்றனர் இதற்கு பெயர் போனவர் மகேந்திர சிங் தோனி ஆனால் இவரது உத்தியை பலரும் தற்போது கடைபிடித்து வருகின்றனர். அப்படித்தான் சமீபகாலமாக ஓரளவிற்கு பேட்டிங் பிடிக்க தெரிந்த பந்துவீச்சாளர்களை தொடக்க வீரர்களாக களம் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். அப்படி இந்த வருடம் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ள பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.

Rashid

ரஷித் கான் :

இவர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் தற்போது இவருக்கு 21 வயதுதான் ஆகிறது. சுழற்பந்து வீச்சில் மிகப்பெரிய திறமை காரர் என்று தான் கூற வேண்டும். அதனை தாண்டி அவ்வப்போது திடீரென களமிறங்கி சில சிக்சர்களை அடிப்பதில் வல்லவர். இதன் காரணமாக இவரது ஸ்ட்ரைக் ரேட் 165 என இருக்கிறது. இந்த வருடம் இவர் திடீரென தொடக்க வீரராக களம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Curran

சாம் குரன் :

- Advertisement -

இவர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். பேட்டிங்கும் அதிரடியாக விளையாட கூடியவர். சுரேஷ் ரெய்னா இல்லாத நேரத்தில் இவர் திடீரென துவக்க வீரராக களம் இறக்கப்பட்ட வாய்ப்பு இருக்கிறது.

Mitchell

மிட்செட் மெக்லனகன் :

மும்பை இந்தியன்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவ்வப்போது மதிப்புமிக்க ரன்களை அடித்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் இவர் துவக்க வீரராக களம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் திடீரென மூன்றாவது இடத்தில் அல்லது நான்காவது இடத்திலும் அதிரடியாக ஆட களமிறக்கப்பட்ட வாய்ப்பு இருக்கிறது.

udana

இசுரு உடானா :

இவர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முதன்முதலாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நன்றாக வந்து பேசுவது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடும் திறமை இவருக்கு இருக்கிறது. விராட் கோலி மனது வைத்தால் இவரும் டாப் ஆர்டரில் பேட்டிங் வழங்க வாய்ப்புள்ளது.

ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் :

இவர் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்றுதான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தனது 20 வயது வரை ஒரு துவக்க பேட்ஸ்மேனாக ஆடி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளிலும் சில சதங்கள் அடித்து இருக்கிறார். ஒருநாள் போட்டிகளிலும் சில அரை சதங்கள் அடித்திருக்கிறார். டெல்லி அணி வரை துவக்கத்தில் களமிறக்கி விட்டு சோதனை செய்து பார்க்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.