டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை அதிகமுறை டக் அவுட் செய்த 5 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

என்னதான் ஒரு நாளில் ஆடி முடிக்கப்படும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு சிறந்த வரவேற்பு இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.அது தான் முழு வடிவ போட்டியும் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் வீரர்களின் தனித்துவம் மற்றும் திறமை ஆகியவை முழுமையாக வெளிவரும். ஐந்து நாட்களில் ஆடும் இரு அணிகளுக்கும் இரண்டு இன்னிங்ஸ் என்கிற வீதம் மன ரீதியாக இதை விளையாட தனி பக்குவம் வேண்டும்.அவ்வளவு எளிதில் யாரும் டெஸ்டில் பெயர் எடுத்துவிட முடியாது. சிறுது கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

steyn 2

அப்படிப்பட்ட டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களும் உயிரை கொடுத்து பந்துவீசுவார்கள்.அதிலும் ஒரு சில சமயங்களில் நிதானமாக டைம் எடுத்து ஆடலாம் என எண்ணி வரும் பேட்ஸ்மேன்களை வந்த வேளையில் டக்அவுட் செய்து பெவிலியன் நோக்கி நடையை கட்ட வைப்பார்கள்.

அப்படி அதிக முறை பேட்ஸ்மேன்களை டக்அவுட் செய்த பந்து வீச்சாளர்கள் பற்றி பார்ப்போம்:

ஆண்டர்சன் மற்றும் மெக்ரத் – 104

- Advertisement -

இதுவரை 614 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ள இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனும் , 563 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளென் மெக்ரத்தும் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை பேட்ஸ்மேன்களை டக் அவுட் செய்துள்ளனர். இவர்கள் மொத்தமாக 104 பேட்ஸ்மேன்களை டக் அவுட் செய்துள்ளார்.

Muralitharan

முரளிதரன் மற்றும் வார்னே – 102

அவர்களுக்கு அடுத்த படியாக 800 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ள இலங்கையைச் சேர்ந்த உலக சுழற் ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் , 708 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ள ஆஸ்திரேலிய சுழற் ஜாம்பவான் ஷேன் வார்னேவும் 102 பேட்ஸ்மேன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட் செய்துள்ளனர்.

steyn 1

டேல் ஸ்டைன் – 83

இவர்களைத் தொடர்ந்து 439 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ள தென்னாப்பிரிக்காவின் ஸ்டைன் தி கன் என்று அனைவராலும் அழைக்கப்படும் புயல் பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் 83 முறை பேட்ஸ்மேன்களை டக் அவுட் செய்துள்ளார்.