மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய 5 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Malinga

கிரிக்கெட் வரலாற்றில் தற்போது வரை மூன்று விதமான போட்டிகள் விளையாடப்படுகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகள் தற்போது வரை உருவாக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. இந்த மூன்று விதமான போட்டிகளிலும் 5 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலைப் தற்போது பார்ப்போம்.

Malinga

லசித் மலிங்கா :

இவர் டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறையும், ஒருநாள் போட்டிகளில் 7 முறையும், டி20 போட்டிகளில் ஒரு முறையும் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்

2005 இல் நியூசிலாந்திற்கு எதிராக 5/80 (டெஸ்ட்)
2006 இல் நியூசிலாந்திற்கு எதிராக 5/68 (டெஸ்ட்)
2010 இல் இந்தியாவுக்கு எதிராக 5/50 (டெஸ்ட்)
2010 ல் பாகிஸ்தானுக்கு எதிராக 5/46 (ஒருநாள்)
2011 இல் கென்யாவுக்கு எதிராக 6/38 (ஒருநாள்)
2011 இல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 5/30 (ஒருநாள்)
2011 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5/28 (ஒருநாள்)
2012 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5/54 (ஒருநாள்)
2014 ல் பாகிஸ்தானுக்கு எதிராக 5/52 (ஒருநாள்)
2014 ல் பாகிஸ்தானுக்கு எதிராக 5/56 (ஒருநாள்)
2012 இல் இங்கிலாந்துக்கு எதிராக 5/31 (டி 20 )

umar gul

- Advertisement -

உமர் குள் :

இவர் டெஸ்ட் போட்டிகளில் நான்கு முறையும், ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறையும், டி20 போட்டிகளில் இரண்டு முறையும் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

2004 இல் இந்தியாவுக்கு எதிராக 5/31 (டெஸ்ட்)
2006 இல் இங்கிலாந்துக்கு எதிராக 5/123 (டெஸ்ட்)
2006 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 5/65 (டெஸ்ட்)
2009 இல் இலங்கைக்கு எதிராக 6/135 (டெஸ்ட்)
2003 ல் பங்களாதேஷுக்கு எதிராக 5/17 (ஒருநாள்)
2010 இல் இங்கிலாந்துக்கு எதிராக 6/42 (ஒருநாள்)
2009 இல் நியூசிலாந்திற்கு எதிராக 5/6 (டி20)
2013 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5/6 (டி20

அஜந்தா மெண்டிஸ் :

இலங்கை அணியின் சர்ச்சைக்குள்ளான சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர் டெஸ்ட் போட்டிகளில் நான்கு முறையும், ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறையும், டி20 போட்டிகளில் இரண்டு முறையும் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

2008 இல் இந்தியாவுக்கு எதிராக 6/117 (டெஸ்ட்)
2008 இல் இந்தியாவுக்கு எதிராக 5/56 (டெஸ்ட்)
2010 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 6/169 (டெஸ்ட்)
2014 இல் பங்களாதேஷுக்கு எதிராக 6/99 (டெஸ்ட்)
2008 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 5/22 (ஒருநாள்)
2008 இல் இந்தியாவுக்கு எதிராக 6/13 (ஒருநாள்)
2008 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 6/29 (ஒருநாள்)
2011 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6/16 (டி 20 )
2012 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 6/8 (டி20)

Southee-2

டிம் சவுதி

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் டி20 போட்டிகளில் ஒரு முறையும், டெஸ்ட் போட்டிகளில் 6 முறையும், ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறையும் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

Bhuvi

புவனேஸ்வர் குமார் :

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் போட்டிகளில் நான்கு முறையும், ஒருநாள் போட்டிகளில் ஒரு முறையும், டி20 போட்டிகளில் ஒரு முறையும் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

2014 இல் இங்கிலாந்துக்கு எதிராக 5/82 (டெஸ்ட்)
2014 இல் இங்கிலாந்துக்கு எதிராக 6/82 (டெஸ்ட்)
2016 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 5/33 (டெஸ்ட்)
2016 இல் நியூசிலாந்திற்கு எதிராக 5/48 (டெஸ்ட்)
2017 இல் இலங்கைக்கு எதிராக 5/42 (ஒருநாள்)
2018 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5/24 (டி20)