இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த காத்திருக்கும் 5 அட்டகாசமான பவுலர்ஸ் – லிஸ்ட் இதோ

ipl-bowlers
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் துபாய் மைதானங்களில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தயாராகி வருகிறது. துபாய் மைதானங்கள் இந்திய மைதானங்களை விட சற்று வித்தியாசமானவை. இதனை பலர் கூறக் கேட்டிருப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக செயல்படும் என்று அந்த மைதானத்தில் விளையாடிய வீரர்கள் கூறியிருக்கிறார்கள்.
அளவில் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மைதானத்தில் இந்த வருடத்தில் ஐபிஎல் தொடர் விளையாடப்படும் போது அதிக விக்கெட் வீழ்ந்த வாய்ப்புள்ள 5 வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

- Advertisement -

சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

இவர் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். துவக்க இடத்திலும் களமிறங்கி வருகிறார். இவர் சுழற்பந்து வீச்சாளர் என்பதால் துபாய் மைதானங்களில் இவர் பந்து வீச்சில் பெரிதாக ஈடுபடும் தொடர்ந்து கடந்த 8 வருடங்களாக குறைந்தது 13 விக்கெட்டுகளுக்கும் மேலாக எடுத்த ஒரே வீரர் இவர்தான். இந்த வருடம் இவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்பிருக்கிறது.

RABADA

காகிசோ ரபாடா :

- Advertisement -

இவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 250 விக்கெட்டுகள் வீழ்த்தி விட்டார். சென்ற முறை நடந்த ஐபிஎல் தொடரின்போது அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் இவர்தான் இந்த வருடமும் இவருக்கு வாய்ப்புகள் அதிகம்.

இம்ரான் தாஹிர் :

- Advertisement -

இவர் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஆவார். ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவருக்கு துபாய் மைதானங்கள் இயல்பாகவே உதவி செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் 10 விக்கெட்டுக்கு மேலாக வீழ்த்தி வருகிறார்.

Chahal

யுஸ்வேந்திர சாகல் :

- Advertisement -

துவக்கத்தில் மும்பை அணிக்கு விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் இவர். தற்போது விராட் கோலியின் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி தொடர்ந்து சரியாக விளையாடாவிட்டாலும், தனது சுழற்பந்து வீச்சின் மூலம் அந்த அணிக்கு அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை காட்டி வருபவர். இவர் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் இதன் காரணமாக இருக்கும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்பிருக்கிறது.

Chahar4

தீபக் சாகர் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இவர். புவனேஸ்வர் குமார் எப்படி இந்திய அணியில் இடம் பிடித்தாரோ அப்படித்தான் இவரும் தற்போது இருக்கிறார். 28 வயதாகி விட்டது இந்திய அணிக்காக ஒருசில ஒருநாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். தோனியின் தலைமையில் விளையாடுவதால் இவருக்கு இயல்பாகவே விக்கெட்டுகள் விழுந்து விடும். இந்த முறை அதிக விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

Advertisement