2022 சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்ந்த 5 வித்யாசமான வேடிக்கையான தருணங்கள் – வித்யாச பதிவு

Catch Jackc Leach Darll Mitchell
- Advertisement -

உலகம் முழுவதிலும் கோலகலமாக பிறந்துள்ள 2023 புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த வருடமாக அமைய வாழ்த்தும் நிலையில் 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சில அணிகளுக்கு சுமாராகவும் சில அணிகளுக்கு சிறப்பாகவும் அமைந்தது. பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி சில சர்ச்சைகளும் நிகழ்வது வழக்கமாகும். அதே போல் புரியாத புதிர்களை தன்னகத்தே கொண்ட இந்த உலகத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலும் சில வித்தியாசமான வேடிக்கையான நிகழ்வுகள் அரங்கேறுவதும் வழக்கமாகும். அது போன்ற நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்:

1. போல்டில் ரன்கள்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 82* ரன்கள் குவித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போட்டியில் முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரில் இடுப்புக்கு மேலே வந்த பந்தை சிக்சர் அடித்து விட்டு நோ-பால் கேட்ட அவருக்கு விதிமுறைப்படி நடுவர் நோ-பால் வழங்கினார்.

- Advertisement -

அதற்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு நடுவர் நோ-பால் கொடுத்தார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கொந்தளித்த நிலையில் அடுத்து வீசப்பட்ட பந்தில் போல்டான விராட் கோலி நேரத்தை வீணடிக்காமல் ஃப்ரீ ஹிட் என்பதை பயன்படுத்தி 3 ரன்களை எடுத்தார். ஆனால் பிரீ ஹிட்டில் எப்படி அவர் ரன்கள் எடுக்கலாம்? என்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் விதிமுறை தெரியாமல் நடுவரிடம் வாக்குவாதம் செய்தனர். அந்த வகையில் கிரிக்கெட்டின் அரிதான விதிமுறையை தெரியாமல் அவர்கள் விளையாடியது வேடிக்கையானதாக அமைந்தது.

2. வித்யாசமான அவுட்: கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோலஸ் ஜேக் லீச் வீசிய ஒரு பந்தில் டிரைவ் அடித்தார். ஆனால் அந்த பந்து எதிர்புறத்தில் இருந்த பேட்ஸ்மேன் டார்ல் மிட்சேல் ஒதுங்க முயற்சித்தும் பேட்டில் பட்டு தரையில் படாமல் அம்பயர் மீது பட்டு மிட் ஆஃப் திசை நோக்கி சென்றது.

- Advertisement -

அங்கே நின்று கொண்டிருந்த அலெஸ் லீஸ் அல்வா போல திசை மாறி வந்த பந்தை கச்சிதமாக பிடித்து அவுட்டாக்கினர். வரலாற்றில் அது போன்ற அவுட்டை பார்த்தது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

3. சப்ஸ்டியூட் கேப்டன்: கடந்த வாரம் நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் துவங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஒரு தருணத்தில் கேப்டன் பாபர் அசாம் காயத்திற்கு முதலுதவி எடுக்க பெவிலியன் திரும்பினார். அந்த சமயத்தில் எல்பிடபிள்யூ முறையில் ரிவியூ கேட்க வேண்டிய நிலைமை வந்தது. அப்போது தற்காலிக கேப்டனாக தீர்மானிக்கப்பட்டிருந்த சர்ப்ராஸ் அகமத் அவுட் கேட்ட நிலையில் சப்ஸ்டிடியூட் பீல்டராக உள்ளே வந்த முகமது ரிஸ்வானும் “நானும் கேப்டன் தான்” என்ற வகையில் நடுவரிடம் அவுட் கேட்டார்.

- Advertisement -

அது போக நிறைய தருணங்களில் பீல்டிங் செட்டிங் செய்து கேப்டனுக்குரிய வேலையும் அவர் பார்த்தார். ஆனால் சப்ஸ்டிடியூட் பீல்டராக வருபவர்கள் பந்தை பிடித்து போடுவதை தவிர்த்து வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற விதிமுறை தெரியாமல் கேப்டன்ஷிப் செய்த அவரும் பாகிஸ்தான் அணியும் மீண்டும் ஒருமுறை சர்வதேச கிரிக்கெட்டில் வேடிக்கையான நிகழ்வை அரங்கேற்றி கிண்டல்களுக்கு உள்ளானார்கள்.

4. அதிர்ஷ்டமான ஸ்ரேயாஸ்: கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 77 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் எபோதத் ஹொசைன் வீசிய ஒரு பந்தில் டிஃபென்ஸ் ஆடினார். ஆனால் அவரது தடுப்பை தகர்த்த பந்து பின்னாடி இருந்த ஸ்டம்பில் நன்றாகவே அடித்தும் பெய்ல்ஸ் கீழே விழாததால் தப்பிய ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.

- Advertisement -

வரலாற்றில் பலமுறை இது போல் பெய்ல்ஸ் கிழே விழாததால் பேட்ஸ்மேன் தப்பிய கதைகள் உள்ளது. ஆனால் இம்முறை ஆஃப் ஸ்டம்பில் இருந்த பெய்ல்ஸ் பள்ளத்திலிருந்து நகர்ந்து மேலே வந்து ராஜாவைப் போல் உட்கார்ந்து கொண்டு கீழே விழாமல் அடம் பிடித்தது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது.

5. ஸ்பைடர் கேமரா: நவீன கிரிக்கெட்டில் முக்கிய தருணங்களை மேலிருந்து படம் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்பைடர் கேமரா பலமுறை பந்தின் மீது பட்டு கேட்ச் பிடிப்பதையும் சிக்ஸர் போவதையும் தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் கடந்த வாரம் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா மோதிய டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்வதற்காக சென்று ஆன்றிச் நோர்ட்ஜெவை கட்டுப்பாட்டை இழந்த ஸ்பைடர் கேமரா பின் தலைப்பகுதியில் உருட்டுகட்டை போல் அடித்து கீழே விழ வைத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. நல்லவேளையாக அவர் காயத்தை சந்திக்கவில்லை.

இதையும் படிங்கIND vs SL : என் கேரியரில் இந்தியாவுக்காக எதுவுமே சாதிக்கல, 2023 புத்தாண்டில் என்னோட லட்சியம் அது தான் – ஹர்டிக் பாண்டியா உறுதி

அதே போல் 2022 இலங்கை பிரீமியர் லீக் தொடரில் அந்நாட்டு வீரர் சாமிக்கா கருணரத்னே தவறாக கேட்ச் பிடித்து 4 பற்களை இழந்தது, கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து – இந்திய அணிகள் மோதிய ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் ஜார்வோ எனும் ரசிகர் தடையை மீறி மைதானத்துக்குள் நுழைந்தது செய்த அட்டகாச தருணங்கள் வித்தியாசமானதாக அமைந்தது.

Advertisement