இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் இஷான் கிஷன் – விவரம் இதோ

Ishan Kishan
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் கடந்த ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி ஜார்கண்ட் அணியை வெற்றி அழைத்து சென்றதால் மீண்டும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அப்படி கம்பேக் கொடுத்ததில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.

இஷான் கிஷன் நிகழ்த்தப்போகும் சாதனை :

தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி வருவதன் மூலம் இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் நிலையான வீரராகவும் மாறியுள்ளார் அண்மையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் தற்போது இங்கிலாந்து டி20 தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து டி20 தொடரின் எஞ்சியுள்ள நான்கு ஆட்டங்களில் அவர் முக்கிய சாதனை ஒன்றினையும் இந்திய அணியின் சார்பில் நிகழ்த்த காத்திருக்கிறார். அப்படி அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் 10 அரைசதம் என 1341 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த இங்கிலாந்து தொடரின் எஞ்சியுள்ள நான்கு ஆட்டங்களில் 159 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 1500 ரன்கள் பூர்த்தி செய்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைவார். டி20 போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி சார்பாக அதிக ரன்களை குவித்த வீரராக ரோஹித் சர்மா 4231 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி நல்ல டேலன்ட் தான்.. ஆனாலும் நாம் சஞ்சுவை விட்டு விடக்கூடாது – காரணத்தை கூறிய தினேஷ் கார்த்திக்

அவருக்கு அடுத்து விராட் கோலி 4188 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போதைய நிலையில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இஷான் கிஷன் 12-ஆவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement