IND vs SL : என் கேரியரில் இந்தியாவுக்காக எதுவுமே சாதிக்கல, 2023 புத்தாண்டில் என்னோட லட்சியம் அது தான் – ஹர்டிக் பாண்டியா உறுதி

Hardik-Pandya
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடுகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு பதிலாக 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ செய்து துவங்கியுள்ளது. அதற்கு டி20 கிரிக்கெட்டில் அடுத்த புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.

INDia Hardik pandya

ஆனால் கடந்த வருடம் இந்த உயரத்தை தொடுவார் என்று அவரும் ரசிகர்களும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் 2016இல் அறிமுகமாகி 2018 வாக்கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆல்-ரவுண்டராக அசத்திய அவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியை இந்திய ரசிகர்களிடம் ஏற்படுத்தினார். ஆனால் 2018 ஆசிய கோப்பையில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் 2019 உலகக்கோப்பையில் மீண்டும் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

எதுவும் சாதிக்கல:
அதிலிருந்து முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட அவர் காயத்துடன் சுமாராக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது அதனால் கடுப்பான தேர்வுக்குழு முழுமையாக குணமடைந்து பந்து வீசும் வரை வாய்ப்பில்லை என்று அதிரடியாக அவரை நீக்கியது. அதனால் மும்பை நிர்வாகமும் கழற்றி விட்ட நிலையில் அதற்காக மனம் தளராமல் பயிற்சிகளை எடுத்த அவர் 2022 ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்தி முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பை வென்று கொடுத்து தன் மீதான விமர்சனங்களை உடைத்து தனது திறமையை நிரூபித்தார்.

Hardik-Pandya

அதனால் அதிரடியாக நீக்கிய அதே தேர்வுக்குழு தாமாக மீண்டும் தேர்வு செய்ததில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர், 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிவு செய்த முக்கிய வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் இன்று வெள்ளை பந்து கிரிக்கெட்டின் அடுத்த கேப்டனாக முன்னேறியுள்ளார். அப்படி 2022இல் அபார கம்பேக் கொடுத்த அவர் ஐபிஎல் அளவில் சாதித்தாலும் இந்தியாவுக்காக தன்னுடைய கேரியரில் எதுவும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

எனவே 2023 புத்தாண்டில் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுப்பதே தம்முடைய லட்சியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி இலங்கை டி20 தொடருக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நிலைமைகள் மாறுபட்டதாக இருந்தது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். அதனால் கடந்த வருடம் எனக்கு மேஜிக் நிறைந்த வருடமாக அமைந்தது. இருப்பினும் நாங்கள் டி20 உலக கோப்பையை வெல்வதற்கு விரும்பினோம்”

Hardik-Pandya

“ஆனால் அது நடைபெறவில்லை என்பதால் பரவாயில்லை. விளையாட்டில் தோல்விகளும் ஒரு அங்கமாகும். இந்த நிலைமையில் நாம் முன்னோக்கி நடக்க உள்ளோம். இந்த சமயத்தில் நான் என்ன சாதிக்க விரும்புகிறேன்? என்று கேட்டால் நிறைய உள்ளது. சொல்லப்போனால் என்னுடைய கேரியரில் நான் பெரிதாக எதுவும் இதுவரை சாதிக்கவில்லை. எனவே நல்ல எதிர்காலத்தை நோக்கியுள்ள எனக்கு இந்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை வெல்வது முதன்மை லட்சியமாகும்”

இதையும் படிங்க2023 புத்தாண்டு வந்தாலும் தார் மட்டும் மாறல, பாகிஸ்தானை ஓப்பனாக கலாய்த்த நியூஸிலாந்து வீரர் – ஐஸ்லாந்து வாரியம்

“குறிப்பாக இந்த புத்தாண்டில் உலகக் கோப்பை வெல்வதே என்னுடைய இலக்காகும். இதை விட பெரிய இலக்கு இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. எனவே எங்களுடைய இலக்கில் நாங்கள் வெற்றி பெற பாடுபட உள்ளோம். குறிப்பாக எங்களுக்கு பிரகாசமாக ஏற்பட்டுள்ள வாய்ப்பில் எங்களுடைய அனைத்தையும் கொடுத்து வெல்வதற்கு முயற்சிக்க உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement