இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Dhoni
- Advertisement -

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடரில் யுஏஇ மைதானங்களில் நடைபெற்றது. ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடருக்கு அனைவரும் இந்திய மைதானத்தில் நடைபெறும் என்று அதற்காக பயிற்சி செய்தனர். இருந்தாலும் ஒரு சில வீரர்கள் நன்றாக ஆடினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் நட்சத்திர வீரர்கள் நன்றாக ஆடவில்லை. அப்படிப்பட்ட வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்

pant

- Advertisement -

ரிஷப் பண்ட் :

டெல்லி அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் ஆன இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி இருக்கிறார். இவர் ஆட்டம் இந்த வருடம் பெரிதாக எடுபடவில்லை. 14 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 343 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் இவரது ஸ்ட்ரைக் ரேட் 113 மட்டுமே ஆகும்.

Dhoni-1

மகேந்திர சிங் தோனி :

- Advertisement -

சர்வதேச கிரிக்கட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்த வருடம் மிகச் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வருடமும் தோனி ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை. 14 போட்டிகளில் விளையாடி மொத்தம் 200 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார் அதிகபட்சம் 47 ரன்கள் அடித்து இருக்கிறார்.

Maxwell

கிளன் மேக்ஸ்வெல் :

- Advertisement -

2014 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் இது நாள் வரை ஒரு போட்டியில் கூட பெரிதாக ஆடவில்லை இந்த வருடம் 13 போட்டிகளில் ஆடி வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்

Karthik

தினேஷ் கார்த்திக் :

- Advertisement -

கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்தே தினேஷ் கார்த்திக் பெரிதாக விளையாடவில்லை. இந்த வருடமும் அப்படித்தான் செய்திருக்கிறார் 14 போட்டிகளில் ஆடி வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

Russell

ஆண்ட்ரே ரஸல்:

கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான இவர் இந்த வருடம் பத்து போட்டியில் விளையாடி வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

Advertisement