இந்த ஐபிஎல் போட்டியில் சிறந்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்..! – தரவரிசையில் தோனி எந்த இடம் தெரியுமா ..!

thaladhoni
- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் 11 வது சீசன் பாதி கட்டத்தை தாண்டியுள்ளது. இதில் விளையாடி வரும் 8 அணிகளுமே 10 போட்டிகள் விளையாடி முடித்து விட்டனர். அதில் ஒரு சில அணிகள் தங்களது 11 வது போட்டிகளை கூட விளையாடி முடித்துவிட்டது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் யார் சிறந்த டாப் 5 பேட்ஸ்மேன் என்று தற்போது பார்க்களாம்.

MS

- Advertisement -

எம். எஸ். தோனி:-

சென்னை அணியின் கேப்டனாக இரண்டு ஆண்டுகள் களைத்து களமிறங்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது அதிரடியான ஆட்டதை மீண்டும் புதுப்பித்துள்ள தோனி, இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 360 ரன்களை குவித்துள்ளார். மேலும், 27 சிக்சர்களையும் விளாசி இந்த தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்

கிறிஸ் கெயில்:

- Advertisement -

கடந்த சீசன் வரை பெங்களூரு அணியில் விளையாடிய இந்த அதிரடி பேட்ஸ்மேனை இந்த ஆண்டு ஏலமெடுக்க கூட நாதி இல்லாமல் இருந்தது. இறுதியில் பஞ்சாப் அணி இவரை 2 கோடி ரூபாய் என்ற நிர்ணயதொகைக்கே வாங்கியது. அந்த வருத்தமோ என்னவோ தெரியவில்லை இந்த ஐ.பி.எல் தொடரில் வெறித்தனமாக விளையாடிவருகிறார்.இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 311 எடுத்துள்ளார் மேலும் 1 சதம் ,3 அரை சதத்தையும் எடுத்துள்ளார்.

gayle

கேன் விலல்லியம்ஸன்:-

- Advertisement -

ஹைதராபாத் அணியில் ஆடிவரும் இவர்,10 போட்டிகளில் 411 ரன்களை குவித்துள்ளார். மேலும், 14 சிலக்சர்கள் மற்றும் 33 பௌண்டரிகளை அடித்துள்ளார். சிறப்பாக விளையாடியதோடு மட்டுமல்லாமல் தான் கேப்டனாக இருந்து வரும் அணியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் முதலிடத்தில் வசித்துவருகிறார்.

அம்பதி ராயுடு:-

- Advertisement -

சென்னை அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த முன்னாள் மும்பை வீரர். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான இவர் சென்னை அணியின் மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரர் வாட்ஸனுடன் ஜோடி சேர்ந்து பட்டையைக்கிளப்பி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் ஆடிய இவர் 423 ரன்களை குவித்துள்ளார்.

rayudu

கே.எல். ராகுல் :-

பஞ்சாப் அணியில் விளையாடிவரும் இவர், அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்றே கூறலாம். இதுவரை 10 போட்டிகளில் ஆடிய இவர் 471 ரன்களை குவித்துள்ளார் அதில் 4 அரை சதமும் அடங்கும். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 பந்துகளில் 50 ரன்களை அடித்து ஐ.பி.எல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

 

Advertisement