ஐ.பி.எல் தொடரை ஆட்டிப்படைக்கும் 5 முக்கிய ஜாம்பவான்கள் – லிஸ்ட் இதோ

IPL
- Advertisement -

கிறிஸ் கெயில் :

யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் இவர் ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய விளம்பரதாரர் ஆக இருந்தார். இவர் ஆடுகளத்தில் செய்யும் சேட்டைகள், அதிரடி காட்டும் வாணவேடிக்கைகள் என அனைத்தும் அது ஒரு மிகப் பெரும் மதிப்பை கொண்டு வந்தது . அத்துடன் சேர்த்து ஐபிஎல் மூலம் பிரபலமானார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை பல நூறு கோடிகள் சம்பாதித்து விட்டார். 2008ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஆடி அவர் அதன்பின்னர் பெங்களூரு கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற பல்வேறு அணிக்காக விளையாடினார். 125 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 4454 ரன்களை விளாசியுள்ளார் 6 சதங்களும் 28 அரை சதங்களும் அடங்கும் எந்த ஒரு வீரருக்கும் இல்லாதவகையில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 151 ஆக இருக்கிறது.

- Advertisement -

gayle

டுவைன் பிராவோ :

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இரண்டு சீசன்களில் மும்பை அணிக்காக ஆடிய இவரை தோனி கட்டம் கட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டுவந்தார். அதன்பின்னர் இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஓஹோவென்று சென்றுவிட்டது. மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பத்து வருடங்களாக விளையாடி வருகிறார். 1379 ரன்களும் 136 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட்டோமேட்டிக் தேர்வாக இருப்பார். அந்த அளவிற்கு நம்பும் இவர் தோனியின் இவருக்கு கைமாறாக பலவற்றை செய்திருக்கிறார். ஐபிஎல் உருவாக்கிய ஜாம்பவான்களில் இவரும் ஒருவர்.

- Advertisement -

Bravo1

ரோகித் சர்மா :

மும்பை இந்தியன்ஸ் முதல் இரண்டு சீசன்களாக ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடி ஒரு ஹாட்ரிக் விக்கெட் ரோகித் சர்மா எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தார் பின்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவிதியே மாறியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தற்போதுவரை 4,494 34 அரை சதங்கள் விளாசியுள்ளார். ரோகித் சர்மா 4 கோப்பைகளை இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வென்று கொடுத்துள்ளார். இதுதான் ஒரு அணி அதிகபட்சமாக வென்றுள்ள கோப்பையின் எண்ணிக்கையாகும்.

- Advertisement -

விராட் கோலி :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2008 ஆம் ஆண்டு பெங்களூரு அணி இந்த சிறுவனுக்கு மிகப் பெரிய திறமை இருக்கிறது என்று எண்ணி தனது அணியில் எடுத்து அதை அவர் எப்போதும் பொய்யாக்கியது இல்லை. கோப்பையை, தான் வெல்ல விலையோ தவிர இவரது பர்பாமன்ஸ் எப்போதும் குறைந்த விலை தற்போது வரை 163 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மொத்தம் 4,948 ரன்களை விளாசி விட்டார். 34 அரை சதங்களும் 5 சதங்களும் இதில் அடங்கும் மூன்று முறை ஒரே சீசனில் 500 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டியை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை என்று கூறலாம்.

மகேந்திர சிங் தோனி :

ஐபிஎல் மூலம் பட்டை தீட்டப்பட்ட மிகப் பெரிய ஜாம்பவான் இவர். ரோகித் சர்மா அதிக கோப்பையை வென்றால் விராட் கோலி அதிக ரன்கள் விளாசி இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று தனி மவுசு இவரால் தான் வந்தது. இவரின் தலைமையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விளையாடும் போதெல்லாம் பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த அளவிற்கு ஐபிஎல் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருந்தவர் இவர், மேலும் ஏழு முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் 3 முறை கோப்பையை வென்றுள்ளார்.

Advertisement