இந்த வருட ஐபிஎல் தொடர் துபாய் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியில்லாமல் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தற்போது ஐபிஎல் தொடரில் அற்புதமாக யார்க்கர் வீசும் பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.
தங்கராசு நடராஜன் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த இளம் வீரர். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தற்போது சர்வதேச வீரர்களை தனது பந்து வீச்சால் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். டெல்லி அணிக்கு எதிராக இவரிடம் பந்து கொடுக்கப்பட்டது. 42 பந்துகளில் 85 ரன்கள் அடிக்க வேண்டும் அற்புதமாக பந்துவீசிய நடராஜன் தொடர்ந்து 6 பந்துகளில் யார்க்கர் வீசினார் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரோன் ஹெட்மையர் என சர்வதேச தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்து அந்த போட்டியை வெற்றி பெற்றுக் கொடுத்தார் தங்கராசு நடராஜன் .
ககிசோ ரபடா – டெல்லி கேப்பிடல்ஸ் :
இவர் சர்வதேச தரத்திலான வீரராவார். தொடர்ந்து மூன்று வருடங்களாக சர்வதேச அளவில் தனது திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மிகச்சரியாக யார்க்கர் வீசுவதில் இவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. இந்த வருடம் சூப்பர் ஓவர் வீசி அந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து பட்டையை கிளப்பினார் ரபாடா.
ஜஸ்பிரித் பும்ரா :
இவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை பலமுறை இந்திய அணியை தனது யார்க்கரால் வெற்றிபெற வைத்திருக்கிறார். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி பேட்ஸ்மேன்களை தனது யார்க்கர் மூலம் திணறடிப்பதில் வல்லவர்.
டேல் ஸ்டைன் :
தற்போது சரியாக இவரால் பந்து வீச முடியவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அளவிற்கு யாராலும் யார்க்கர் பந்துகளையும் மிகத்துல்லியமாக வீச முடியும் என்று இருந்தது கிடையாது. தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு உள்ள டேல் ஸ்டெயின் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பந்து வீச முடியவில்லை. தற்போதும் கூட வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்து வருகிறார். மீண்டும் இவரை இவரது துல்லியமான பந்துகளை நாம் களத்தில் பார்க்கலாம்.
ட்ரெண்ட் போல்ட் :
இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட இவர். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார். இவராலும் பும்ராவிற்கு இணையாக மறுபுறத்தில் இருந்து தொடர்ந்து யார்க்கர் வீசமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.