ஐ.பி.எல் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த டாப் 5 பெஸ்ட் பீல்டர்ஸ் – லிஸ்ட் இதோ

Raina

ஐபிஎல் தொடர் எப்போதும் வாணவேடிக்கைக்கு பெயர் போனது. அப்படி அடிக்கப்படும் ஒரு சில பந்துகள் வாண வேடிக்கையாக மாறுவதில்லை. மாறாக வீரர்களின் கையில் கேட்ச் ஆக மாறிவிடுகிறது. அப்படி பல நூறு கேட்ச் பிடிக்கப்பட்டுள்ளது தற்போது ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்கள் பிடித்தவர்களின் பட்டியலை பார்ப்போம்.

Bravo

டுவைன் பிராவோ – 60 கேட்ச் :

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆவார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி மொத்தம் 134 போட்டிகளில் விளையாடி 74 கேட்ச் பிடித்திருக்கிறார்.

<strongகைரன் பொல்லார்ட் – 70 கேட்ச் :

- Advertisement -

இவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். பட்டையை கிளப்பும் பீல்டிங் திறமை கொண்ட இவர் மொத்தம் 148 போட்டிகளில் விளையாடி 82 கேட்ச் பிடித்து இருக்கிறார்.

Rohith

ரோகித் சர்மா – 71 கேட்ச் :

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவர் ஆடிய 188 போட்டிகளில் அனைத்தையும் சேர்த்து 83 கேட்ச் பிடித்து இருக்கிறார்.

ABD

ஏபி டிவில்லியர்ஸ்- 72 கேட்ச் :

டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளுக்காக ஆடியுள்ளவர் மொத்தம் 154 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 84 கேட்ச் பிடித்து இருக்கிறார்.

raina

சுரேஷ் ரெய்னா – 86 கேட்ச் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான இவர் மொத்தம் 193 போட்டிகளில் விளையாடி 102 கேட்ச் பிடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். (குறிப்பு :இந்த கணக்குகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டின் முடிவில் கணக்கிடப்பட்டது.)