சர்வதேச அணிகளுக்கு எந்தவித சர்ச்சையும் இன்றி சிறப்பாக பயிற்சியளித்த 5 பயிற்சியாளர்கள் – விவரம் இதோ

- Advertisement -

வீரர்கள் என்னதான் திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் சரியான பாதையில் செல்ல அறிவுரையும் தேவை. கிரிக்கெட்டில் அப்படி சிறந்த வீரர்களையும் அணிகளையும் பயிற்சி செய்து உருவாக்கிய 5 சிறந்த பயிற்சியாளர்கள் பற்றி பார்ப்போம்.

டேவ் வாட் மோர் :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியவர். இவரது தலைமையில் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி கோப்பையை வென்றது. மேலும், 2005 ஆம் ஆண்டு வங்கதேச அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. பின்னர் பாகிஸ்தான் அணிக்காக பயிற்சியாளராக இருந்தபோது 2012ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை கைப்பற்றியது. மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

Whatmore

டங்கன் பிளட்சர் :

- Advertisement -

இவர் ஜிம்பாவே நாட்டைச் சார்ந்தவர். இங்கிலாந்து அணிக்கு 2007 ஆம் ஆண்டு பயிற்சியாளராக இருந்தபோது 18 வருடங்கள் கழித்து ஆஷஸ் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். அதன் பின்னர் இந்திய அணிக்கு நான்கு வருடங்கள் பயிற்சியாளராக இருந்தார் .இவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி 8 சர்வேதேச தொடர்களையும், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Fletcher

ஆன்டி பிளவர் :

- Advertisement -

இவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை சேர்ந்தவர். இங்கிலாந்து அணிக்கு 2009 ஆம் ஆண்டு பயிற்சியாளராக இருந்தார். இவரது தலைமையில்தான் முதன்முதலில் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. மேலும், 2009,2011, 2013 ஆம் ஆண்டுகளில் ஆஷஸ் தொடரையும் வென்றது.

andy flower

டேரன் லீமேன் :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். ஐபிஎல் தொடரின்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு 2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக இருந்தார். ஆஸ்திரேலிய அணி அதலபாதாளத்திற்கு சென்றபோது 2013ஆம் ஆண்டு இவர்தான் அந்த அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

Lehman

மைக் ஹெசன் :

மார்டன் டே கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பயிற்சியாளராக கருதப்படுபவர். தனது 22 வயதிலேயே பயிற்சியாளரான பணியைத் துவக்கிவிட்டார். 2011 ஆம் ஆண்டு கென்ய அணிக்காக பயிற்சியாளராக இருந்தார். அதன்பின்னர் அர்ஜென்டினா அணிக்காக எட்டு மாதங்கள் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். பின்னர் 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்து ஆறு வருடங்கள் அந்த அணியுடன் இருந்தார் இவரது காலத்தில்தான் நியூஸிலாந்து அணி பல சர்வதேச தொடர்களை வென்றது. 2015ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும் சென்றது.

Advertisement