ஐபிஎல் வரலாறு ! கடினமான பிளே ஆஃப் சுற்றில் அதிக சிக்ஸர்களை தெறிக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்கள்

raina
- Advertisement -

ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த டி20 தொடரில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் எதிரணி பவுலர்களை பந்தாடி ரசிகர்களை மகிழ்விப்பதுடன் தனது அணி வெற்றி பெறுவதற்காக சிக்சர்களை பறக்கவிட்டு அதிரடியாக ரன்களை குவிக்கும் முனைப்பில் களமிறங்கினாலும் அனைத்து நேரங்களிலும் அது சாத்தியமாவது கிடையாது. ஏனெனில் பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் அவர்களின் திறமையை மிஞ்சும் அளவுக்கு சிறப்பாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்தால் மட்டுமே ரன்களை குவிக்க முடியும். அந்த நிலைமையில் ஐபிஎல் தொடரில் சாதாரண லீக் சுற்று போட்டிகள் கூட கடைசி ஓவரின் கடைசி பந்து வரை செல்வதால் அதில் பங்கேற்கும் பேட்ஸ்மேன்களுக்கு கடினத்தை கொடுக்கும்.

ABD-1

- Advertisement -

அப்படிபட்ட நிலைமையில் பிளே ஆப் சுற்றுகள் எனப்படும் நாக் – அவுட் சுற்று போட்டிகளில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் அதிரடியாக விளையாடி சிக்சர்களை பறக்க விடுவதற்கு யோசிப்பார்கள். ஏனெனில் தோல்வியடைந்தால் வெளியேறவேண்டும் என்ற சூழ்நிலையில் முழு வலுவை கொடுத்து அடிக்கும் சிக்சர்கள் தவறிப்போய் கேட்ச்சாக மாறி விட்டால் அதோடு அந்த பேட்ஸ்மேன் வெளியேற வேண்டும் என்பதுடன் தனது அணியும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அதன் காரணமாக நாக் – அவுட் போட்டிகளில் எப்போதுமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் கூட இயற்கையாகவே ஏற்படும் பதற்றத்தால் தடுமாறுவார்கள். இருப்பினும் அதையும் தாண்டி சிலர் மட்டுமே தைரியமாகவும் தில்லாகவும் நின்று அசால்டாக சிக்சர்களை பார்க்க விடுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் பைனல் உட்பட பிளே ஆப் சுற்றில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

Gayle

5. கிறிஸ் கெயில் (18): ஐபிஎல் வரலாற்றில் 357 சிக்ஸர்களுடன் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் சூறாவளி புயல் கிறிஸ் கெய்ல் விளையாடிய கொல்கத்தா, பெங்களூர் போன்ற அணிகள் அதிக அளவில் பிளே ஆப் சுற்றில் விளையாடியதில்லை என்ற நிலைமையில் களமிறங்கிய நாக்-அவுட் போட்டிகளில் 18 சிக்சர்களை பறக்க விட்ட அவர் இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. ஷேன் வாட்சன் 20: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான், சென்னை போன்ற அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக 2018இல் ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த மாபெரும் இறுதிப்போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை துரத்திய சென்னைக்கு அட்டகாசமான சதமடித்து 3-வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் அந்தப் போட்டியில் மட்டும் 8 சிக்சர்களை பறக்கவிட்டார். அந்த வகையில் மொத்தமாக 20 சிக்சர்களை அடித்துள்ள அவர் இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. கைரன் பொல்லார்ட் 25: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக காலம் காலமாக விளையாடி வரும் கைரன் பொல்லார்ட் எப்போதுமே லீக் சுற்றில் சுமாராக செயல்பட்டாலும் கூட அந்த அணி பிளே ஆஃப் சுற்று செல்லும் போதெல்லாம் இரட்டை மடங்கு அதிரடி காட்டக் கூடியவராக வரலாற்றில் இருந்து வருகிறார்.

pollard

அந்த அளவுக்கு அழுத்தமான பெரிய போட்டிகளை மிகவும் விரும்பும் அவர் மும்பை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்த பிளே ஆஃப் போட்டிகளில் மொத்தம் 25 சிக்சர்களை பறக்கவிட்டு இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

2. எம்எஸ் தோனி 28: இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி தனது வாழ்நாளில் முக்கால்வாசி போட்டிகளில் அழுத்தம் நிறைந்த கடைசி கட்ட நேரத்தில் களமிறங்கி அதிரடியான மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி இமாலய சிக்சர்களை பறக்க விட்டு கையில் கிடைக்காத பல வெற்றிகளைக் கூட சாத்தியமாக்கி பினிஷர் என்ற பெயரைப் பெற்றவர்.

Dhoni 1

சாதாரண லீக் போட்டிகளில் கூட கடைசி நேரத்தில் களமிறங்கி அற்புதமாக பேட்டிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய அவருக்கு அழுத்தம் நிறைந்த பிளே ஆஃப் போட்டிகளும் வழக்கமான ஒரு போட்டியை போன்றதாகும். சென்னைக்காக 9 பைனல்களில் கேப்டனாக விளையாடிய அவர் 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள நிலையில் பிளே ஆஃப் போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி 28 சிக்சர்களை பறக்கவிட்டுள்ள அவர் இந்தப் பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. சுரேஷ் ரெய்னா 40: தனது அதிரடி சரவெடியாக பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை பந்தாடி பட்டாசாக பேட்டிங் செய்யக்கூடிய முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் சென்னை அணிக்காக காலம் காலமாக தனது மிரட்டல் பேட்டிங்கால் பல சரித்திர வெற்றிகளை பெற்று கொடுத்தவர். சாதாரணமாகவே பவுலர்களை வெளுத்து வாங்கும் அவர் வரலாற்றில் சென்னை தகுதி பெற்ற 11 பிளே ஆஃப் சீசன்களிலும் 9 பைனல்களிலும் விளையாடிய பெருமை கொண்டவர்.

raina 1

அப்படிப்பட்ட இவர் மொத்தமாக 40 சிக்சர்களை பறக்கவிட்டு ஐபிஎல் வரலாற்றில் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேனாக இன்றும் சாதனை படைத்துள்ளார் என்பதாலேயே ரசிகர்கள் அவரை மிஸ்டர் ஐபிஎல் என்று கொண்டாடுகின்றனர். அதன் காரணமாகவே இந்த வருடம் சென்னை அணி நிர்வாகம் அவரை கழற்றி விட்டது ரசிகர்களை கோபமடைய வைத்தது

Advertisement