இந்த ஐ.பி.எல் தொடரில் வெறித்தனமாக வெளுத்து கட்ட காத்திருக்கும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Batsmans

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு அலாதியான விஷயம். ஒவ்வொரு வருடமும் புதிய புதிய வீரர்கள் ஆரஞ்சு தொப்பியை வென்று வருகிறார்கள். அதிகபட்சமாக கிரிஸ் கெய்ல் மூன்று முறையும், டேவிட் வார்னர் இரண்டு முறையும் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கின்றனர். இந்தியாவின் சார்பில் சச்சின் டெண்டுல்கர், ஒரு முறையும் விராட் கோலி ஒரு முறையும் ஏற்கனவே இதனை செய்திருக்கின்றார்கள்.

இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இங்கு யார் ஆரஞ்சு தொப்பியை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்போம்.

விராட் கோலி :

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான இவர் ஐபிஎல் தொடரில் 5 சதங்கள் இதுவரை அடித்திருக்கிறார். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு மொத்தமாக 973 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். இந்த வருடமும் இவருக்கு வாய்ப்பு இருக்கிறது .

Rohith

- Advertisement -

ரோகித் சர்மா :

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான இவர் துவக்க வீரராக அல்லது மூன்றாம் நிலை வீரராக எப்போதும் களமிறங்குகிறார். இதன் காரணமாக இவருக்கும் வாய்ப்புள்ளது.

டேவிட் வார்னர் :

சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான இவர் ஏற்கனவே 3 முறை 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். தொடக்க வீரராக இவர் களம் இறங்குவதால் பெரிய வாய்ப்பு இருக்கிறது.

Rahul 1

கே எல் ராகுல் :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவரும் துவக்க வீரர் தொடர்ந்து. நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் இவரும் இந்த வருடம் சில சதங்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வெல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

Gill

சுமன் கில் :

இவர் இந்தப் பட்டியலில் புதிய வீரர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இவர் இந்த வருடம் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இறங்கினால் இவரது திறமையை வெளிப்படுத்தி ஆரஞ்சு தொப்பியை வெல்வார்.