பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட கூடிய 5 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

ஐபிஎல் தொடரில் பல பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளராக செயல்பட்டு அதில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சில் பல சாதனை படைத்திருக்கிறார்கள். தற்போது விளையாடும் பேட்ஸ்மேன்கள் சிலர் சில நேரங்களில் பந்துவீச்சாளராக பயன்படக்கூடிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

Smith-1

ஸ்டிவன் ஸ்மித் :

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 2010ஆம் ஆண்டு சுழற்பந்து வீச்சாளராக தான் அறிமுகமானார். தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி தற்போது வரை இவரை பந்துவீச்சாளராக பயன்படுத்தாவிட்டாலும் இவர் ஒரு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை

Rohith

ரோகித் சர்மா :

- Advertisement -

2010 ஆம் ஆண்டு தான் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான இவர் அதற்கு முன்னதாக 2009 ஆம் ஆண்டு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு விளையாடினார். மேலும், தனது சுழற்பந்து வீச்சின் மூலமாக டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் ரோகித் சர்மா.

கேன் வில்லியம்சன் :

சன் ரைசர்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென் இவர் நியூசிலாந்து ஆடும்போது சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீசி 72 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

maxwell

கிளன் மேக்ஸ்வெல்

உண்மையில் ஆல்ரவுண்டர் அவர் சமீபகாலமாக பேட்டிங் மற்றும் பிடித்து வருகிறார். தேவைப்பட்டால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவரால் சுழல் பந்து வீச முடியும். மேலும் பேட்டிங்கில் அதிரடி மட்டுமின்றி பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் நிரூபிக்க கூடியவர் இவர் .

watson

ஷேன் வாட்சன் :

39 வயதான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிய போது இவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். தற்போது தான் இவர் பந்து பேசுவதில்லை ஆனால் இவர் ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.