சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்போட்டி மற்றும் கடைசி போட்டி என இரண்டிலும் சதமடித்த வீரர்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ

டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்படி இருந்தும் முதல் டெஸ்ட் போட்டியிலும் தாங்கள் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Azharuddin

முகமது அசாருதீன் :

இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் கங்குலிக்கு முன்பு இவர் தான். இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று பாராட்டப்பட்டவர். 1984 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். இந்த போட்டியில் சதம் அடித்து இருந்த இவர் 2000 ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை பெங்களூர் மைதானத்தில் விளையாடினா.ர் அந்த போட்டியிலும் 102 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.

ரெஜினோல்ட் டஃப் :

1905ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் இவர். மொத்தம் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 1902 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய போதும் சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

வில்லியம் போன்ஸ்ஃபோர்ட் :

இவர் 1924 ஆம் ஆண்டு முதல் 1934ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியவர். தனது முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1924 ஆம் ஆண்டு சதம் அடித்திருந்தார் .அதன் பின்னர் 1954-ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 266 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார்.

Chappell

கிரேக் சேப்பல் :

ஆஸ்திரேலிய அணியின் வீரரான இவர் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 1970 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி 182 ரன்கள் விளாசி இருந்தார். அதன் பின்னர் 1984-ஆம் ஆண்டு விளையாடியவர் அந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 108 ரன்கள் அடித்து அசத்தினர்.

cook

அலஸ்டேர் குக் :

இங்கிலாந்து அணி உருவாக்கிய மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கரின்பல சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெகு சீக்கிரத்தில் ஓய்வு பெற்றுவிட்டார் இந்திய அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு அறிமுகமாகி 104 ரன்கள் விளாசினார். அதன் பின்னர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.