ஒரே ஒரு செஞ்சுரி கூட அடிக்காமல் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

T20

டி20 போட்டிகளின் வரவிற்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் வெகுவாக உயர்ந்துவிட்டது என்றே சொல்லலாம். 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளில் சதமடிப்பது என்பதே பெரிய விடயமாக இருந்த கால கட்டங்கள் மறைந்து சென்று, இன்று 20 ஓவர்களை மட்டுமே கொண்ட டி20 போட்டிகளில் சதமடிப்பதுகூட எளிதான காரியமாக மாறிவிட்டது. சில முன்னனி வீரர்கள் டி20 போட்டிகளில் அதிகளவிலான ரன்களை அடித்திருந்தாலும் இந்த வகையான போட்டிகளில் இன்னமும் ஒரு முறைகூட சதமடிக்காமல் இருக்கின்றனர். இந்த பதிவில் டி20 போட்டிகளில் ஒரு முறைகூட சதமடிக்காமல் அதிக ரன்கள் அடித்திருக்கும் டாப் ஐந்து வீரர்களை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Dhoni

மஹேந்திர சிங் தோனி:

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த இவர், ஐபிஎல் தொடர்களில் தற்போதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர் இதுவரை 338 டி20 போட்டிகளில் விளையாடி 38.8 என்ற அவரேஜில் 6858 ரன்கள் குவித்திருக்கிறார் என்றாலும் இவர் ஒரு முறைகூட டி20 ஆட்டங்களில் சதமடிக்கவில்லை.

Uthappa

ராபின் உத்தப்பா:

- Advertisement -

2007 ஆம் நடைபெற்ற முதல் சர்வதேச டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்த இவர், ஐபிஎல் தொடர்களில் எப்போதுமே ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கியிருக்கிறார். 273 டி20 போட்டிகளில் விளையாடிய இவர், ஒரு முறைகூட சதமடிக்காமல் மொத்தம் 6861 ரன்களை குவித்திருக்கிறார்.

குமார் சங்ககரா:

டி20 கிரிக்கெட் போட்டிகளில் டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாடி இருந்தாலும் ஒரு போட்டியில்கூட இவரால் 100 ரன்கள் என்ற சாதனையை எட்ட முடயவில்லை. மொத்தம் 267 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 6937 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 43 அரைசதங்களும் அடக்கம். ஒரு போட்டியில் இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 78ஆக இருக்கிறது.

இயான் மோர்கன்:

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் மோர்கன், 319 டி20 போட்டிகளில் 7009 ரன்களை அடித்திருக்கிறார். ஒரு போட்டியில் இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக 91 ரன்கள் இருக்கிறது. இவருக்கு 34 வயது தான் ஆகிறது என்பதால் இனிவரும் காலகட்டத்தில் டி20 போட்டிகளில் சதமடிக்க இவருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

malik

சோயிப் மாலிக்:

39 வயதாகும் சோயிப் மாலிக் இதுவரை டி20 போட்டிகளில் 10,488 ரன்கள் அடித்திருக்கிறார். டி20 போட்டிகளில் 64 அரை சதங்கள் அடித்திருக்கும் இவர், ஒரு முறைகூட சதமடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இவர் இடம்பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement