ஒருநாள் தரவரிசையில் ஒருமுறை கூட முதலிடம் பிடிக்காத 5 பேட்டிங் லெஜண்ட்ஸ் – லிஸ்ட் இதோ

Batsman
- Advertisement -

ஐசிசி வெளியிடும் ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியிலில் முதலிடத்தை பல ஜாம்பவான் வீரர்கள் பெற்றிருக்கின்றனர் என்றாலும், உலகின் பல முன்னனி வீரர்களுக்கு அந்த முதலிடமானது எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய போதிலும் சில வீரர்களுக்கு அந்த முதலிடத்தை பிடிக்கும் அதிர்ஷ்டம் இல்லாமல்தான் இருக்கிறது. இந்த பதிவில் ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தும் ஒரு முறைகூட முதலிடத்தை பிடிக்காத சிறந்த ஐந்து வீரர்களை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Williamson

கேன் வில்லியம்சன்:

- Advertisement -

கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக மட்டுமில்லாமல் நியூசிலந்து அணியின் கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்படும் வில்லியம்சன், 150 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சீரான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தி வந்தாலும் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை ஒரு முறைகூட இவரால் முதிலிடத்தை பிடிக்க முடியவில்லை.

Inzamam

இன்சமாம் உல் ஹக்:

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இவர், ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடருக்குப் பின் தனது ஓய்வு முடிவை அறிவித்துவிட்ட இவர், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியிலில் மூன்றாவது இடத்திற்கு சென்றிருக்கிறாரே தவிர முதிலிடத்தை ஒருபோதும் பிடித்ததில்லை.

Sangakkara

குமார் சங்க்காரா:

- Advertisement -

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தப் படியாக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியிலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் குமார் சங்ககரா, கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் இருந்தபோதே தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்திருந்தார். ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஒருமுறைகூட முதலிடத்தை பிடிக்காத இவர், இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறார்.

ஜோ ரூட்:

- Advertisement -

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றிய பின்னர், இவர் ஒரு நாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் அரிதாகவே காணப்படுகிறார். ஆனால் அதற்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கும் இவர், தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தும் அசத்தியிருக்கிறார். வரும் காலங்களில் ஒரு நாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இவருக்கு இடம் கிடைத்தால் முதலிடம் பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

rohith 1

ரோஹித் சர்மா:

இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக திகழும் இவர், இதுவரை ஒரு நாள் போட்டிகளில் முதலிடத்தை பிடிக்கவில்லை. தற்போது வரை இரண்டாவது இடத்தில் இருக்கும் இவர் இனிவரும் காலகட்டங்களில் முதலிடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லிக்கும், இவருக்கும் இடையில்தான் எப்போதுமே போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது.

Advertisement