ஒரு ஓவரின் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய 5 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

கிரிக்கெட் நாளுக்கு நாளுக்கு மாறிக்கொண்டே வருகிறது.புதிய ரெக்கார்ட்டுகள் படைக்கப்படுவதும் அதை பிந்நாளில் உடைக்கப்படுவதும் இங்கே அது வழக்கம். சர் டொனால்ட் பிராட்மேன், சர் விவியன் ரிச்சர்ட் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை மற்றும் தற்போது உள்ள விராட் கோலி என காலம் ஒவ்வொரு விதமான கிரக்கெட் வீரர்களை நமக்கு பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு போட்டிகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு அது பின்னர் உடைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் 2007இல் நடந்த தொடக்க டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஒரு ஓவர அடித்த ஆறு சிக்ஸர்கள் சாதனையை நினைவில் கொள்வார்கள். அது போல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகளை வீழ்த்தியும் இருக்கின்றனர். அப்படி ஒரு ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த அந்த 5 கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. சந்தீப் பாட்டீல் :

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் 1980 ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் நுழைந்தார். அவர் விளையாடிய நாட்களில் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பு மகத்தானது. சந்தீப் பாட்டீல் தனது பேட்டிங்கில் பலவிதமான ஷாட்டுக்களை கைவசமாக கொண்டிருந்தார். வலது கை வீரரான இவர் 29 டெஸ்ட் மற்றும் 45 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருககிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 சதங்களுடன் 3000 ரன்களை அவர் குவித்து இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ,முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 425 ரன்களை ஸ்கோர் செய்து இருந்தது. பின்பு களமிறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 173/6 என்ற நிலையில் இருந்தது. சந்தீப் பாட்டீல் திடீரென ஒரு ஓவரில் ஆறு பவுண்டரிகளின் அடித்து சாதனையை நிகழ்த்தியது மட்டுமில்லாமல் 129 ரன்களும் அடித்து அசத்தினார். ஆனால் அந்த 6 பவுண்டரிகளில் ஒரு பவுண்டரி நோபாலில் அடிக்கப்பட்டது. தொடர்ச்சியானதாக அடிக்கப்படவில்லை.

Gayle

2.கிறிஸ் கெயில் :

- Advertisement -

கரீபியன் சூப்பர் ஸ்டாரான கிறிஸ் கெய்ல் தனது பெயருக்கு பின் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். ஆறு-அடி மாஸ்டரான இவர் லிமிட்டெட் கிரிக்கெட் வடிவத்தில் ஒரு வழக்கமான நட்சத்திரமாக இருந்து வருகிறார். இருப்பினும், அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார், இது ஒரு சிலரை ஆச்சரியப்படுத்தக்கூடும். மொத்தத்தில், அவர் 7000 ரன்களை 42.19 ஆவரேஜ் விகிதத்தில் அதிர்ச்சி தரும் விதத்தில் ரன்களை குவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டில் ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகளை கெயில் ஸ்கோர் செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 470 ரன்களை ஸ்கோர்போர்டில் பதிவு செய்தது. பதிலுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்டீவ் ஹார்மிசனின் இரக்கமற்ற பந்துவீச்சுக்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை இழந்தது.பின்னர் ஃபாலோ ஆன் செய்ய வேண்டிய நிர்பந்தத்தால் மீண்டும் பேட்டிங் செய்ய, கெய்ல் விசேஷமான ஒன்றைச் செய்தார் இது ரசிகர்களிடமிருந்தும் நிபுணர்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது. மத்தேயு ஹோகார்ட் வீசிய ஓவரில், கெயில் ஆறு பவுண்டரிகளை அடித்து நொறுக்கியது பார்வையாளர்களுக்கு வர்ணஜாலமாக இருந்தது.

Rahane

3.அஜிங்க்யா ரஹானே :

- Advertisement -

நம்பத்தகுந்த-டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒரு சிறந்த ஸ்விங்-பால் வீரர், 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிராக லார்ட்ஸில் அவரது முதல் உயர்-வகுப்பு சதத்திலிருந்து இன்று வரையில் நம்பத்தது பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது, ​ரஹானே உற்சாகமாக மற்றும் சாந்தமாக கடைசி வரை நின்று போட்டியில் வெற்றியைப் பதிவு செய்ய இந்தியாவுக்கு உதவினார். ஐபிஎல் 2012இல் 32 வயதான ரஹானே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியில், ஒரு ஓவரில் ஆறு பவுண்டரிக்களை பறக்க விட்டார் . ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார் மற்றும் அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையையும் பெற்றார்.

Dilshan

4.திலகரத்னே தில்ஷன் :

- Advertisement -

தில்ஷன் மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். அவரது கையில் ஏராளமான கிரிக்கெட் ஷாட்டுக்களை கொண்டிருந்தார். 330 ஒருநாள் போட்டிகளில் 10,290 ரன்களையும், 87 டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களையும் எடுத்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இவர் இந்த சாதனை படைத்தது கூடுதல் சிறப்பம்சமாகும்.ஆஸ்திரேலியா 376 எனகிற இமாலய டார்கெட்டை வைக்க அதை சேஸ் செய்ய களமிறங்கியது ஸ்ரீ லங்கா. தொடக்கத்தில் மிட்செல் ஜான்சன் வீசிய ஓவரில் தில்ஷன் தனது கூட்டாளியான லஹிரு திரிமன்னேவை ஆரம்பத்தில் இழந்தார். ஐந்து ஓவர்களுக்குப் பிறகு, இலங்கை 22/1 என்ற நிலையில் இருந்தது.அப்போது தான் தில்ஷன் ஆறு பவுண்டரிகளை பறக்க விட்டு பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை கதி கலங்க வைத்தார் .இறுப்பினும் இறுதியில்
64 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது.

shaw-2

5.ப்ரித்வி ஷா :

டெல்லி அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான பிரத்வி ஷா தற்போது இந்தியாவில் நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிவம் மாவியின் ஓவருக்கு எதிராக 6 பந்துகளில் 6 பவுண்டரி அடித்தார். அதுவும் இந்த போட்டியின் முதல் ஓவரிலேயே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement