இவங்க கூட ஐ.பி.எல் தொடரில் பவுலிங் போட்டு விக்கெட் எடுத்து இருக்காங்களா ? 5 முழுநேர பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் என்றாலே அதில் விறுவிருப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் இந்த தொடர்களில் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று, அப்போது அது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். ஆனால் அதன் பிறகு அதைப் பற்றியெல்லாம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விடுவார்கள். அந்த மாதிரியான சுவாரஸ்யமான நிகழ்வுகளை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்க்கும்போது மனதிற்குள் ஒரு சிறிய ஆச்சர்யம் எழுவது இயல்பான ஒன்றுதான். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான், கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று நாம் கருதிக் கொண்டிருந்த பல வீரர்கள் சில நேரங்களில் பந்து வீசி நமக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அவர்களுக்கு பந்து வீசகூட தெரிந்திருக்கிறது என்று நாம் வியந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில், விக்கெட்டுகளையும் கைப்பற்றி அவர்கள் அசத்தியிருக்கின்றனர். இந்த பதிவில் ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசி விக்கெட் எடுத்துள்ள முழு நேர பேட்ஸ்மேன்கள் ஐந்து பேரை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

simmons

லெண்டில் சிம்மன்ஸ்:

- Advertisement -

2014ஆம் ஆண்டு மும்பை அணியில் அறிமுகமான இவர், அந்த ஆண்டு தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராபின் உத்தப்பாவிற்கு எதிராக பந்து வீசினார். இவரின் முதல் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், இவர் வீசிய அடுத்த ஓவரில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். ஒரு ஆல்ரவுண்டராக சிம்மன்ஸை மாற்றலாம் என்று நினைத்த ரோஹித் சர்மா இந்த போட்டியுடன் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

ஆடம் கில்கிறிஸ்ட்:

- Advertisement -

உலகிலேயே தலைசிறந்த விக்கெட் கீப்பராக விளங்கிய கில்கிறிஸ்ட், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது பந்து வீசி இருக்கிறார். கடைசி ஓவரில் மும்பை அணி 50 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற சூழ்நிலையில் வக்கெட் கீப்பிங் பணியை பிரவீன் குமாரிடம் ஒப்படைத்துவிட்டு பந்து வீசிய இவர், அந்த ஓவரில் ஹர்பஜன் சிங்கின் விக்கெட்டையும் எடுத்துள்ளார். விக்கெட் வீழ்த்திய பின் அதனை அவர் கொண்டாடியது ஐபிஎல் வராலாற்றில் நடந்த மறக்க முடியாத தருணமாக இருக்கிறது.

finch

ஆரோன் பிஞ்ச்:

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் இந்தியா அணியின் கேப்டனாக இருந்த இவர், அந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசி சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை எடுத்துள்ளார். சச்சினின் விக்கெட்டை எடுத்த நம்பிக்கையில் தொடர்ந்து சில போட்டிகளில் பந்து வீசிய இவரால் மேற்கொண்டு ஒரு விக்கெட்டைகூட எடுக்க முடியவில்லை.

Dhawan

ஷிகர் தவான்:

2011 மற்றும் 2012 ஆம் ஆகிய ஆண்டுகளில் ஹைதராபாத் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கலக்கிய ஷிகர் தவான், ஐபிஎல் தொடர்களில் இதுவரை நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். வீரேந்திர சேவாக், கல்குலி, ஷான் மார்ஷ், டேவிட் வார்னர் ஆகிய மிகப் பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றிய அவரை பந்து வீச தடை செய்திருக்கிறது ஐசிசி. அவருடைய பந்து வீசும் முறை பந்தை எறிவது போன்று இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

rahane

அஜிங்யா ரஹானே:

ஒரு புரஃபஷ்னல் பேட்ஸ்மேனாக நம் அனைவருக்கும் தெரிந்த ரஹானே, தனது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலும் இதுவரை ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசி, அந்த ஓவரில் விக்கெட்டும் எடுத்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ரஹானே பஞ்சாப் அணிக்கு எதிராக பந்து வீசி, அந்த அணி வீரரான லுயூக் போம்பர்ஸ்பேச் என்ற வீரரை போல்ட்டாகியுள்ளார்.

Advertisement