- Advertisement -
உலக கிரிக்கெட்

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிவேக சதமடித்த 5 வேர்ல்டு பெஸ்ட் பேட்ஸ்மேன்ஸ் – லிஸ்ட் இதோ

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் ஆடுவது மிகவும் பெருமையான விஷயம். அதிலும், அவ்வாறு முதல் போட்டியில் ஆடும் போது சதம் அடித்தால் இன்னும் மிகப்பெரிய விஷயமாக இருக்கும் அப்படி தங்களது முதல் டெஸ்ட் போட்டியிலேயே வேகமாக சதமடித்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

ஷிகர் தவான் :

- Advertisement -

சேவாக் மற்றும் கம்பீர் இருந்த காரணத்தால் காலம் கடந்து தான் இந்திய அணியில் இடம் பிடித்தார் ஷிகர் தவான் .2013ம் ஆண்டு தோனி தலைமையில் அறிமுகமான இவர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 85 பந்துகளில் சதமடித்தார். இந்த போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றது. அதன் பின்னர் இந்த போட்டியில் 185 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவைன் ஸ்மித் :

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரரான இவர் 2004ஆம் ஆண்டு அறிமுகமானவர். முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு இவர் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெறும் 93 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதம் அடித்திருந்தார்.

பிரித்திவி ஷா :

- Advertisement -

கடந்த வருடம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானவர் இவர். இளம் வயதிலேயே மிகவும் திறமையாக இருந்ததால் இவரை இந்திய அணி அறிமுகப்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் 99 பந்துகளில் சதமடித்தார் அதன் பின்னர் அதிரடியாக விளையாடி மொத்தம் 134 ரன்கள் அடித்திருந்தார்.

மேட் பிரியர்

- Advertisement -

லார்ட்ஸ் மைதானத்தில் இந்த இங்கிலாந்து வீரர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 105 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதம் அடித்ததன் மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் இங்கிலாந்து அணியின் முதன்மை கீப்பராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அபுல் ஹாசன் :

வங்கதேச அணியின் பந்து ஆல்ரவுண்டர் இவர் 2012ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பத்தாம் இடத்தில் வந்து விளையாடினாலும் சிறப்பாக விளையாடி 106 பந்துகளில் சதமடித்தார். இவர் இதன்மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -
Published by