டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே இருந்த காலகட்டத்தில் பவுண்டரி அடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. தரையோடு தரையாக அடித்துவிட்டு பந்தை பவுண்டரிக்கு செல்லும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் பேட்ஸ்மேன்கள். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் வந்த பிறகு எப்படியாவது ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு விளாச வேண்டும் என்றுதான் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசி வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்,

மகேந்திர சிங் தோனி – 229 :
இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 297 முறை பேட்டிங் பிடித்துள்ளார். இதில் 826 பவுண்டரிகளும் 229 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் இந்த பட்டியலில் இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ரோகித் ஷர்மா – 244 :
இவர் மொத்தம் 224 முறை ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 217 முறை பேட்டிங் பிடித்துள்ளார் மொத்தம் 817 பவுண்டரிகளும் 244 சிக்சர்களும் அடித்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சனத் ஜெயசூர்யா – 270 :
இலங்கை அணியின் அதிரடி வீரர் இவர் மொத்தம் 445 ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடியுள்ளார். இதன்மூலம் 270 சிக்ஸர்களும் 1500 பவுண்டரிகளும் விளாசியுள்ளார்.

கிறிஸ் கெயில் – 331 :
தற்போது வரை 40 வயதிற்கு மேல் ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அதிரடியாக ஆடக்கூடியதில் வல்லவர். வெஸ்ட் இண்டீஸ் அணி 306 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 331 சிக்சர்கள் அடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் 16 சிக்சர்கள் இவர் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாஹித் அப்ரிடி – 351 :
பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரரான சிக்சர்களுக்கு பெயர் போனவர் 398 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 351 சிக்சர்கள் விளாசி உள்ளார். மேலும் 730 பவுண்டரிகளும் அளித்துள்ளார் என்பது தனிச்சிறப்பு.



