சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கும் 5 ஸ்பெஷல் ஆல்ரவுண்டர்ஸ். இந்திய அணியில் இருந்து 2 வீரர்கள் – லிஸ்ட் இதோ

allrounders
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு வீரரால் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்தையும் செய்ய முடியும் என்றால் அந்த வீரர் ஒரு மிகப்பெரிய பேக்கேஜ்தான். தற்போது கிரிக்கெட் உலகில் இருக்கும் மிகச் சிறந்த ஐந்து ஆல்ரவுண்டர்களின் பட்டியலைப் பார்ப்போம்.

Pandya 1

- Advertisement -

ஹர்திக் பாண்டியா :

30 ஆண்டுகாலம் கழித்து கிடைத்த மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இவர். 2016ம் ஆண்டு அறிமுகமானார். தனக்கான இடத்தை இந்திய அணியில் பிடித்துக்கொண்டார். 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். 21 போட்டிகளில் மட்டுமே பேட்டிங் பிடித்து 602 ரன்கள் எடுத்துள்ளார். 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி சராசரியாக 60 வைத்திருக்கிறார் மற்றும் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பின் வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடுவதிலும் வல்லவர். அதே நேரத்தில் ஆறு பந்துகளுக்கு 10 ரன்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும் பந்து வீசவும் இவருக்கு தெரியும்.

Stokes

பென் ஸ்டோக்ஸ் :

- Advertisement -

தற்போது கிரிக்கெட் உலகில் உள்ள மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இவர்தான். பல போட்டிகளை தன்னந்தனியாக நின்று இங்கிலாந்துக்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கூட கடைசி வரை நின்று பட்டையைக் கிளப்பி கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் ஆறு சதங்களுடன் 2129 ரன்களும் எடுத்துள்ளார். 95 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் 54 போட்டிகளில் விளையாடி 1,650 ரன்களையும் 3 சதங்களையும் குவித்துள்ளார்.

Moeen

மொயின் அலி :

- Advertisement -

இவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். இடது கைய் பேட்டிங்கும், வலது கை ஆப்-ஸ்பின்னரும் வீசுவார். டெஸ்ட் போட்டிகளில் 2400 ரன்களும் 131 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1344 ரன்களும் 49 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். திடீரென இறங்கி அதிரடியாக 10 பந்துகளுக்கு 30 ரன்கள் அடிக்க கூடிய திறமை வாய்ந்தவர்.

Jadeja 1

ரவீந்திர ஜடேஜா :

- Advertisement -

இந்திய அணிக்கு தோனியின் காலத்தில் உருவாகிய ஒரு வீரர். ரோஹித் சர்மாவை போலவே இவருக்கும் தோனி பல விமர்சனங்களுக்கு இடையே பல வாய்ப்புகள் கொடுத்து காப்பாற்றி வைத்திருந்தார். தற்போது வரை இவர் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1769 ரன்களும் 213 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் .ஒருநாள் போட்டிகளில் 2296 ரன்களும் 187 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டியில் அதிரடியாக ஆட கைதேர்ந்தவர். 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவரும் இவரே. தொடர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

shakib

ஷகிப் அல் ஹசன் :

சமகாலத்தில் உருவான மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இவர். டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து போட்டிகளிலும் வங்கதேசம் சொதப்பினாலும், இவர் தனது திறமையை காட்டிக் கொண்டே இருப்பார் . வங்கதேச அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர். மொத்தம் டெஸ்ட் போட்டிகளில் 3594 ரன்களும், 188 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 5050 ரன்களும், 226 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இதில் ஏழு சதங்களும் அடங்கும்.

Advertisement