இந்த சீசனில் இந்த 4 அணிகளும் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் – ஆஸி வீரர் கணிப்பு

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்கள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் கிரிக்கெட், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை ஓப்பனாக பேசிவருகின்றனர். அதேபோல் சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இந்த தொடர் குறித்த தங்களது கணிப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் இந்த வருடம் பிளேஆப் சுற்றில் இரண்டாவது அணியாக கோலியின் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பட்டியலை ஆக்கிரமிக்கும் எனக் கருதுகிறேன்.

Abrcb

ஏனெனில் கடந்த ஆண்டுகளை விட தற்போது இந்த தொடருக்கான பெங்களூர் அணி முழு பலத்துடன் உள்ளது. அதே போன்று பெங்களூர் அணியின் பயிற்சியாளர்களும் சிறப்பாக இருக்கின்றனர். அதேபோல் வழக்கம்போல மும்பை அணி முதலிடத்தை பிடிக்கும் ஏனெனில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த மும்பை அணியில் ரோகித் ஷர்மா தொடங்கி பின் வரிசையில் பொல்லார்ட், பாண்டியா சகோதரர்கள் வரை அதிரடி ஆல்ரவுண்டர் கள் நிறைந்து இருப்பதால் அந்த அணிக்கு இது கூடுதல் பலம்.

- Advertisement -

MI

மேலும் மூன்றாவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், நான்காவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் சென்னை அணி நான்காவது அணியாகவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இதுவரை நடைபெற்ற 12 சீசன்களில் தான் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியாக சென்னை அணி திகழ்வது குறிப்பிடத்தக்கது.