இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் 4 ஜாம்பவான்களின் வாரிசுகள் – லிஸ்ட் இதோ

Samith
- Advertisement -

கிரிக்கெட் உலகில் ஒரு வீரர் ஜொலித்து விட்டால், அவரது வாரிசுகளும் கிரிக்கெட் களத்தில் கால் பதிக்க ஆசைப்படுவார்கள். அப்படி பல வாரிசுகள் நன்றாக விளையாடும் ஒரு சில வாரிசுகள் பெரிதாக சாதனையை ஏதும் படைக்காமலும் வெளியேறுகின்றனர். தற்போது எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு இருக்கும் கிரிக்கெட் வாரிசுகள் பற்றி பார்ப்போம். இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சிலர் பெரிய அளவில் இந்திய அணிக்கு சாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களின் பட்டியலையே உங்களுக்காக தொகுத்துளோம். என்னதான் ஜாம்பவான்களின் வாரிசாக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே இந்திய அணிக்காக விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

arjun 3

- Advertisement -

அர்ஜுன் டெண்டுல்கர் :

இவர் சச்சின் டெண்டுல்கரின் மகன் ஆவார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் ஒரு வலது கை ஆட்டக்காரர். ஆனால் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடதுகை ஆட்டக்காரர் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர். ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக தனது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். வெகு சீக்கிரத்தில் இந்திய அணியில் இடம்பெற்று ஜொலிக்க போகிறார்.

சமித் டிராவிட் :

- Advertisement -

இவர் இந்திய அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் ஆவார். தற்போது இவருக்கு 14 வயதாகிறது . தனது தந்தையைப் போலவே அபாரமான பேட்ஸ்மேன் ஆவார். சீக்கிரத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்து விளையாடப் போகிறார்.

Armaan-Jaffer

அர்மான் ஜாபர் :

- Advertisement -

இவர் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் இன் தம்பி மகனாவார். வலதுகை அதிரடி பேட்ஸ்மேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் தொடரில் ஆடி 224 சராசரி வைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடினார் தற்போது உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார்.

Aryan-Bangar

ஆரியன் பங்கர் :

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் இன் மகன். இவர் மும்பை அணிக்காக விளையாட முயற்சி செய்து வருகிறார். பாண்டிச்சேரி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடி இருக்கிறார். தற்போது இங்கிலாந்தின் ஒரு கவுண்டி அணியில் இளம் வயது வீரர்களின் அணியில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

Advertisement