பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியர்களை செஞ்சு விட்ட விராட் கோலியின் 3 தங் லைஃப் தருணங்கள்

IndvsAus-1
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இம்முறை இந்திய மண்ணில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் இத்தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் நிறைந்திருப்பதால் தரத்திற்கும் விறுவிறுப்புக்கும் எப்போதும் பஞ்சமிருக்காது எனலாம். மேலும் பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் ஸ்லெட்ஜிங் செய்யும் கலையை வெற்றிகரமாக பின்பற்றி வெற்றி பெறுவதில் கைதேர்ந்தவர்கள் என்பார்கள்.

அப்படிப்பட்ட அவர்கள் வரலாற்றில் சிலமுறை இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக கருதப்படும் விராட் கோலியிடம் தங்களது வேலையை காட்டியுள்ளார்கள். ஆனால் அதற்கு அவர்களது பாணியில் பதிலடி கொடுத்த விராட் கோலியின் சில மறக்க முடியாத தருணங்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. கேப்டனுக்கு பதிலடி: 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் 2வது போட்டியில் ஆரம்ப முதலே ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைனுக்கும் விராட் கோலிக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டது. அந்த இருவரும் பேசிக் கொண்டது ஸ்டம்ப் மைக்கில் பதிவான நிலையில் ஒரு கட்டத்தில் உள்ளே புகுந்த நடுவர் இருவரையும் சமாதப்படுத்தினார். இருப்பினும் ஒரு தருணத்தில் சிங்கிள் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விராட் கோலியின் நெஞ்சோடு நெஞ்சாக உரசாத குறையாக டிம் பைன் சென்றார்.

அதனால் விராட் கோலி கோபமடைந்த நிலையில் அடுத்த சில ஓவர்களில் முகமது சமியின் முரட்டுத்தனமான பவுன்சர் பந்துக்கு பதில் சொல்ல முடியாத டிம் பைன் எட்ஜ் கொடுத்தார். நேராக தம்மிடம் வந்த அந்த பந்தை பிடித்த விராட் கோலி வாய் சவடால் பேசிய அவரை நாக்கை வெளியே நீட்டி வித்தியாசமாக கத்தி சிரித்துக் கொண்டே பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

- Advertisement -

2. தோள்பட்டை கலாட்டா: 2017 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ராஞ்சியில் நடைபெற்ற 2வது போட்டியில் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட விராட் கோலியை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் கலாய்க்கும் வகையில் நடந்து கொண்டனர். அதாவது விராட் கோலி பேட்டிங் செய்யும் போது அவரது காயத்தை கலாய்க்கும் வகையில் வேண்டுமென்றே தங்களது தோள்பட்டைகளை வலியுடன் அசைப்பது போல் அசைத்து அந்த இருவரும் கேலி செய்தனர்.

அதை கவனித்த விராட் கோலி அதே போட்டியில் முழுமையாக குணமடையாத போதும் பீல்டிங் செய்ய களமிறங்கி டேவிட் வார்னர், நேதன் லயன் ஆகியோர் அவுட்டான போது வேண்டுமென்றே தனது தோள்பட்டையில் அதிக வலியை உணர்வது போன்ற ரியாக்சன் கொடுத்து ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியினருக்கும் தக்க பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

1. ஜான்சனுக்கு முத்தம்: கடந்த 2014/15இல் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக களமிறங்கிய விராட் கோலி ஸ்ட்ரைட் ட்ரைவ் அடிக்க முயற்சித்தார். ஆனால் நேராக வந்த அந்தப் பந்தை பிடித்த அந்த அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன் வேண்டுமென்றே விராட் கோலி உடம்பில் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு வரவேற்றார்.

அதை சற்றும் எதிர்பார்க்காத விராட் கோலி வாங்கிய அடியில் களத்தில் விழுந்தார். அப்போது ஆஸ்திரேலிய பூமி இப்படித்தான் இருக்கும் தம்பி என்று விராட் கோலியை தட்டிக் கொடுத்து ஜான்சன் சென்றது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது. இருப்பினும் தொடர்ந்து பேட்டிங் செய்த விராட் கோலி ஒரு கட்டத்தில் அவரது பந்தில் எட்ஜ் வாயிலாக பவுண்டரி அடித்த பின் வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க:தல தோனியின் கடைசி போட்டி இதுதான். உறுதியான தகவலை வெளியிட்ட சி.எஸ்.கே நிர்வாகம் – இதோட ஓவர்

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது வழக்கம் போல நடுவர்கள் உள்ளே புகுந்து சமாளித்தனர். அதைத்தொடர்ந்து மீண்டும் வேகத்துடன் பேட்டிங் செய்து விராட் கோலி சதமடித்த பின் அவுட்டாக்குவதற்குகாக மிட்சேல் ஜான்சன் நிறுத்திய பீல்டர்கள் இடத்தில் வேண்டுமென்றே பவுண்டரிகளை அடித்து பதிலடி கொடுத்தார். இறுதியில் அசால்டாக பவுண்டரிகளை பறக்க விட்டு வெளுத்து வாங்கிய விராட் கோலி ஒரு கட்டத்தில் மிட்சேல் ஜான்சனுக்கு 3 முறை முத்தம் கொடுத்து செய்த தங் லைஃப் தருணத்தை யாராலும் மறக்க முடியாது.

Advertisement