இந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு டஃப் கொடுக்கப்போகும் 3 அணிகள் – விவரம் இதோ

CSK-1

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடர் என்று வந்து விட்டாலே ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இதுவரை மூன்று கோப்பைகளில் கைப்பற்றியுள்ளது. மேலும் ஐந்து முறை ரன்னர் அப் பட்டத்தையும் கைப்பற்றியிருக்கிறது. இப்படி பலம் வாய்ந்த சென்னை அணி சென்ற வருடம் லீக் தொடரிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது.அதை கணக்கில் கொண்டு மிகப் பலம் வாய்ந்த அணையை கட்டமைத்து இந்த வருடம் கோப்பையை வென்ற தீரவேண்டும் என்கிற எண்ணத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டஃப் கொடுக்கப்போகும் மூன்று அணைகள் என்னவென்று பார்ப்போம்

டெல்லி கேப்பிடல்ஸ் :

இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சென்ற வருடம் இறுதிப் போட்டி வரை சென்று அனைத்து அணிகளுக்கும் பயத்தை காண்பித்தது. அதே பயத்தை இந்த வருடமும் காமிக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகமில்லை. தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் ஆவார் அவர் சிறப்பான பார்மில் உள்ளார். சாம் பில்லிங்ஸ் இன் வருகை பவர் பிளே ஓவர்களில் பலத்தைக் கூட்டும். மேலும் ஸ்டீவ் ஸ்மித்தின் வருகை மிடில் ஆர்டரில் ரன்களை கட்டுப்படுத்த உதவும். அது ஒரு பக்கம் இருக்க ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்செல்லும்.

dc

ஒரு பக்கம் பவுலிங்கில் அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல் ஜோடி அபாரமான ஃபார்மில் உள்ளது.மேலும் ரபாடா, நோர்ஜே மற்றும் கிறிஸ் வோக்ஸின் அதிரடி பேஸ் பந்து வீச்சு எதிரணியை கதி கலங்க வைக்கும்.எனவே அனைத்து வகையிலும் ஒரு அதிரடி அணியாக டெல்லி இந்த வருடமும் களமிறங்க உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டஃப் குடுக்கும் அணியாக டெல்லி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் :

புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை வழிநடத்த உள்ளார். பட்லர் ,பென் ஸ்டோக்ஸ் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன் கைவசம் வைத்துள்ளது. இவர்களது அதிரடி ஆட்டம் டாப் ஆர்டரில் அணிக்கு ரன்களை குவித்து தரும். அதன் பின்னர் சஞ்சு சாம்சன் , மன்னன் வோஹ்ரா மற்றும் ரியன் பராக் ஜோடி மிடில் ஆர்டரில் அணியை முன்னெடுத்து செல்லும். ஃபினிஷிங் செய்ய ஜோஃப்ரா ஆர்ச்சர் , கிறிஸ் மோரிஸ் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் போன்ற அதிரடி ஆல்ரவுண்டர்களும் இந்த அணியில் உள்ளனர்.

rr

பவுலிங்கில் மோரிஸ் , ஆர்ச்சர் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி தங்களது பேஸ் அட்டாக்கில் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலை தடுமாற வைப்பார்கள். மேலும் அன்ட்ரூ டையின் பவர் பிளே ஓவர்களிலும் , முஸ்தபிசுர் ரகுமானின் வருகை இறுதி ஓவர்களிலும் ரன்களை கட்டுப்படுத்த உதவும். எனவே ராஜஸ்தான் அணியும் சென்னை சூப்பர் கிங்சுக்கு டஃப் காம்பெடிசன் என்பதில் சந்தேகமில்லை.

மும்பை இந்தியன்ஸ் :

காலம் காலமாக சென்னை சூப்பர் கிங்ஸின் பங்காளியாக மும்பை இந்தியன்ஸ் அணி விளங்கி வருகிறது. லீக் ஆட்டத்திலும் சரி இறுதி ஆட்டங்களிலும் சரி மும்பையின் கை, சி.எஸ்.கே அணியின் கையை விட ஓங்கியிருக்கும். ரோகித் தலைமையில் இதுவரை மூன்று முறை சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. 2019 , 2020 ஆகிய ஆண்டுகளில் தொடரை வென்று இந்த வருடமும் மிக பலம் வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்க உள்ளது.

csk-vs-mi

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா , குயின்டன் டி காக் மற்றும் கிரிஸ் லின் ஆகியோர் அதிரடியை சமாளிக்கவே பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். மேலும் தலைவலியாக மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் , இஷன் கிஷன், குருணால் பாண்டியா ஆகியோர் உள்ளனர். மேலும் இறுதி ஓவர்களில் பட்டையை கிளப்ப பொல்லார்ட் மட்டும் பாண்டியா ஜோடி உள்ளது.

மறுப்பக்கம் பவுலிங்கில் பும்ரா , போல்ட் , கொல்டர் நைல் , ஆடம் மில்னே , ஜிம்மி நீசம் ஆகியோர் தங்களது பேஸ் பௌலிங்கால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைதடுமாற வைப்பார்கள். ராகுல் சஹார் , ஜெயந்தி யாதவுடன் புதிதாக பணியில் சேர்ந்துள்ள பியூஸ் சாவ்லா ஸ்பின் அட்டாகில் அணிக்கு பலத்தை கூட்டுவார்.

எனவே மும்பை அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக பயங்கர டஃப் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.