ஐ.பி.எல் 2021 : இந்த வரும் ஐ.பி.எல் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ள 3 அணிகள் – லிஸ்ட் இதோ

ipl trophy

வருகிற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மே 30 வரை நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர் இப்பொழுதே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் உலக கோப்பை தொடருக்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை இந்த ஐபிஎல் தொடரில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணிகளில் 3 அணிகள் மட்டும் மிக முக்கியமான அணிகளாக கருதப்பட்டு வருகிறது.

mi

மும்பை இந்தியன்ஸ் :

ஐபிஎல் தொடரின் முன்னணி அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். 2013 முதல் அனைத்து வகையிலும் எந்த குறையும் இல்லாமல் ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக ஆடி இதுவரையில் 5 கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறது. மேலும் 2019, 2020 என அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை கைப்பற்றி உள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் இந்த ஆண்டு ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் முனைப்போடு மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்க உள்ளது. டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, குவின்டன் டி காக், கிரிஸ் லின் போன்ற அதிரடி வீரர்கள் ஒரு பக்கம் இருக்க மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் குரலால் பாண்டியாவும் மேலும் போட்டியை முடித்து வைக்கும் அதிரடி வீரர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்டு ஆகியோர் உள்ளனர்.

பவுலிங்கில் பும்ரா – போல்ட் ஜோடி ஒரு பக்கம் இருக்க ஸ்பின் பந்துவீச்சில் ராகுல் சஹார் , ஜெயந்த் யாதவ் , குருணால் பாண்டியா இருக்க மேலும் இந்த ஆண்டு ஏலத்தில் வாங்கப்பட்ட அனுபவ வீரரான சாவ்லாவும் மிரட்ட தயாராக உள்ளனர். ஆல்-ரவுண்டராக இந்த ஆண்டு ஏலத்தில் வாங்கப்பட்ட ஜிம்மி நீஷம், பொல்லார்டுக்கு பேக் அப் வீரராக இருப்பார். மேலும் கொல்டர் நைல் , அடம் மில்னே , தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம் வீரர் மார்கோ ஜென்சென் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அதிரடி காண்பிக்க உள்ளனர்.

பேட்டிங் பவுலிங் ஆல்ரவுண்டர் என அனைத்து வகையிலும் மிக அபாயகரமான அணியாக மும்பை அணி இந்த ஆண்டு களமிறங்க இருக்கிறது எனவே இந்த ஆண்டு மும்பை அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

MIvsDC

டெல்லி கேப்பிடல்ஸ் :

ஸ்ரேயாஸ் அய்யர் இன் தலைமையில் சென்ற ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்ற டெல்லி அணி இந்த ஆண்டு எழுத்தில் வாங்கப்பட்ட சில அனுபவ வீரர்களோடு இன்னும் பலம் வாய்ந்த அணியாக களமிறங்க இருக்கிறது. ஷிகர் தவான் , பிரித்வி ஷா மற்றும் ஏலத்தில் வாங்கப்பட்ட சாம் பில்லிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க போகிறார்கள். மிடில் ஓவர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் , அஜிங்கிய ரஹானே , மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஏலத்தில் வாங்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

மேலும் மேட்சை முடித்து வைக்கும் அதிரடி வீரர்களாக ரிஷப் பண்ட் சிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் ஒரு பக்கம் இருக்கின்றன. பேட்டிங்கை பொருத்தவரை டெல்லி அணி இறுதிவரை நின்று அசத்தக்கூடிய அணியாக திகழ்கிறது. பவுலிங்கில் காகிசோ ரபாடா , கிறிஸ் வோக்ஸ் , நோர்தே இந்த மூவரது கூட்டணி வேகப்பந்து வீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்கச் செய்யும் அளவுக்கு இருக்கின்றது.

மேலும் பலம் கூட்டும் விதமாக உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் ஷர்மா ஒரு பக்கம் இருக்கின்றனர். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஜோடியோடு அமித் மிஸ்ராவும் இருப்பது அணிக்கு கூடுதல் சிறப்பாக திகழ்கிறது. இந்த அனைத்து பேக்டர்களையும் வைத்துப் பார்க்கையில் டெல்லி அணி கோப்பையை வெல்ல தகுதி வாய்ந்த அணியாகவே தெரிகிறது.

Kkr

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

இயான் மோர்கன் தலைமையிலும் களம் இறங்க உள்ள கொல்கத்தா அணியில் சில மாற்றங்கள் இந்த ஆண்டுக்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் , பவன் நெகி மற்றும் பெண் கட்டிங்சை இந்த ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. மேலும் பேட்ஸ்மேனான கருண் நாயர் மற்றும் பவுலர் ஆன ஹர்பஜன் சிங்கை இந்த அணி வாங்கியுள்ளது.
டாப் ஆர்டரை பொருத்தவரையில் ஷுப்மன் கில் , ராகுல் திரிபாதி , செய்ஃபர்ட் , நித்திஷ் ராணா ஆகியோர் பக்க பலத்துடன் இருக்கின்றனர்.

மிடில் ஓவர்களில் நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன் இருக்கின்றனர் மேலும் அதிரடியாக ஆடி மேட்ச் பினிஷிங் செய்யக்கூடிய வீரர்களாக ரஸ்ஸல் மற்றும் கட்டிங் உள்ளனர். பவுலிங்கை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக பேட் கம்மின்ஸ் , செல்டன் ஜாக்சன் , பிரசித் கிருஷ்ணா , கமலேஷ் நகர்கோட்டி , ரசல் மற்றும் கட்டிங்ஸ் உள்ளனர்.ஸ்பின் பவுலிங்கில் சுனில் நரைன் , ஹர்பஜன்சிங் , குல்தீப் யாதவ் , ஹர்பஜன் சிங் மற்றும் வருன்சக்கரவர்த்தி என மிகப் பெரிய பட்டாளமே இருக்கிறது.

மிகப்பெரிய பட்டாளத்தை கொண்டுள்ள கொல்கத்தா அணியும் இந்த வருட ஐபிஎல் கோப்பையை வெல்ல தகுதி வாய்ந்த அணியாக தெரிகிறது.