அடுத்த ஆண்டு டேவிட் வார்னரை ஏலத்தில் தட்டி தூக்க காத்திருக்கும் 3 அணிகள் – லிஸ்ட் இதோ

Warner
- Advertisement -

ஐபிஎல் 14வது சீசனானது, தொடர் ஆரம்பித்த பாதியில் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே கொரானா தொற்று பரவியதை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இத்தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்தை வெளிப்படையாகவே சாடிய டேவிட் வார்னரை, அந்த அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் அதற்கடுத்த போட்டியில் அணியிலிருந்தும் அவரை நீக்கியது. அணி நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு, டேவிட் வார்னரின் மோசமான கேப்டன்சி செயல்பாடும், மந்தமான பேட்டிங்கும் காரணமாக கூறப்பட்டது. இருந்தாலும் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளாத ஐதராபாத் அணியின் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும், டேவிட் வார்னர் ஐதராபாத் அணி நிர்வாகத்தை வெளிப்படையாக சாடியதால் தான் அவருக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்கிறது என்றுகூறி சர்ச்சசைகளை கிளப்பினர்.

warner 1

- Advertisement -

இப்படி அணி நிர்வாகத்திற்கும், டேவிட் வார்னருக்கும் மோதல்போக்கு இருப்பதால் அவரை அடுத்த ஆண்டு அணியிலிருந்து விடுவிக்கும் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை ஐதராபாத் அணியிலிருந்து வார்னர் விடுவிக்கப்பட்டால் அவரை ஏலத்தில் எடுக்க கீழ்கண்ட அணிகள் போட்டி போடும் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த அணிகள் என்னென்ன? டேவிட் வார்னரை ஏலத்தில் எடுக்க ஏன் அவர்கள் போட்டிபோட வேண்டும்? என்பது பற்றி ஒரு அலசல் ரிப்போர்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி கடந்த பல சீசன்களாகவே சரியான ஓபனிங் பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வருகிறது. அதனை சரிசெய்யும் பொருட்டு எப்போதும் ஒன்டவுன் ஆர்டரில் களமிறங்கும் விராட் கோலி சில சீசன்களுக்கு முன்பிருந்தே ஓப்பனிங்கில் களமிறங்கி விளையாடி வருகிறார். இதனால் அந்த அணிக்கு ஒன்டவுன் ஆர்டர் பிரச்சனை இருந்து வருகிறது. எனவே அடுத்த வருட ஏலத்தின் போது டேவிட் வார்னரை அணிக்குள் கொண்டு வந்து, பெங்களூர் அணிக்காக ஓபனிங்கில் விளையாட வைத்தால், மறுபடியும் விராட் கோலி பழையபடி ஒன்டவுன் ஆர்டருக்கு செல்வார் என்பதோடு மட்டுமல்லாமல், பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையும் வலுப்பெறும். இப்போது அந்த அணியில் மேக்ஸ்வெல், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருக்குப் பிறகு சிறப்பாக பேட்டிங் செய்ய யாருமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்டுதான் டேவிட் வார்னரை ஏலத்தில் எடுக்க பெங்களூர் அணி மும்மரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ்:

கடந்த வருடம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 13வது சீசனில் கடைசி இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் அணி, அந்த சீசன் முதலே சரியான ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறி வருகிறது. அந்த அணியில் உள்ள இளம் வீரரான ஜெய்ஸ்வால் மற்றும் அனுபவ வீரரான மனன் வோஹ்ரா ஆகியோருக்கும் அதிகமான வாய்ப்புகளை வழங்கி சோதித்துப் பார்த்த ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தத் தொடரில் அந்த அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் ஒருபுறம் அதிரடியாக விளையாடி, பவர்ப்ளே ஓவர்களில் ரன்களை குவித்தாலும் மறுபுறம் அவருடன் ஓப்பனிங் இறங்கிய வீரர்களான ஜெய்ஸ்வாலும், மனன் வோஹ்ராவும் சோபிக்கத் தவறியதால், அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. எனவே அடுத்த ஆண்டு டேவிட் வார்னரை அணிக்குள் கொணடுவந்தால், ஜோஸ் பட்லருடன், இன்னொரு அதிரடி ஆட்டக்காரரை ஓப்பனிங்கில் களமிறக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. இத் தொடரின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியுடன் இத்தொடரை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு, அதற்குப் பிறகான போட்டிகளில் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான நிதிஷ் ராணா மற்றும் சுப்மன் கில் என இரண்டு ஓப்பனர்களுமே சொதப்பலான ஆட்டத்தையே அளித்திருக்கின்றனர். மேலும் அந்த அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் ரஸல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் மடடுமே சிறப்பாக செயல்படுவடுதால், அடுத்த ஆண்டில் சில வெளிநாட்டு வீரர்களை அணியில் இருந்து விடுவித்துவிட்டு, அதற்கு பதிலாக டேவிட் வார்னரை ஏலத்தில் எடுத்து அந்த அணியின் ஓப்பனிங் பற்றாக் குறையை தீர்த்துக்கொள்ளும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே முந்தைய சீசன்களில் இன்னொரு ஆஸ்திரேலிய ஓப்பனிங் பேட்ஸ்மேனான கிறிஸ் லின் அந்த அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement