இந்த ஐ.பி.எல் தொடரில் சூப்பர் ஓவரில் அசத்தக்கூடிய பேட்ஸ்மேன்களை கொண்ட 3 அணிகள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடர் துவங்கி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் பெரும்பாலான போட்டிகள் வெற்றியோ அல்லது தோல்வியோ என ஒரு முடிவில் முடிவடைந்து விடும் ஆனால் ஒரு சில போட்டிகளில் சூப்பர் ஓவருக்கு சென்று விடும். சூப்பர் ஓவருக்கு செல்லும் போது தங்களது அணியில் உள்ள மிகவும் திறமை வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஒருவர் மற்றும் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தான் ஒவ்வொரு அணியும் தேர்ந்தெடுக்கும். அப்படி சூப்பர் ஓவரில் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் கொண்ட 3 அணியை பற்றி தற்போது பார்ப்போம்.

rcb

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு

- Advertisement -

இந்த அணியில் அதிரடி வீரர்கள் அதிகம் இந்த முறை எடுத்துள்ளது. விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், ஆரோன் பின்ச் ஆகிய மூவர் இந்த அணியில் சூப்பர் ஓவர் விளையாட மிகவும் தகுதியானவர்கள். விராட் கோலியை பற்றி சொல்லத் தேவையில்லை. ஏபி டிவிலியர்ஸ் அதிரடியாக அடித்து துவம்சம் செய்யக்கூடிய வரை அதே நேரத்தில் ஆரோன் பின்ச் வேகப்பந்து வீச்சை விளாசுவதில் வல்லவர் அதே நேரத்தில் மொயீன் அலி என்ற அதிரடி ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருக்கிறார்.

Gayle

கிங்ஸ் லெவன் பஞ்சாப் :

- Advertisement -

கேஎல் ராகுல், கிறிஸ் கெயில் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய 3 பேர் இந்த அணியில் சூப்பர் ஓவர் மிகவும் தகுதியானவர்கள். கேஎல் ராகுல் ஆடாவிட்டால் கூட கிறிஸ் கெய்ல் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் பட்டையை கிளப்பி விடுவார்கள். இருவருமே சூப்பர் ஓவரில் விளையாடி அதிக அனுபவம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

Russell

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரூ ரசல், இயான் மோர்கன் ஆகிய மூவரும் இந்த அணியில் சூப்பர் ஓவரில் விளையாட தகுதியானவர்கள். தினேஷ் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்தார். அதே நேரத்தில் இயான் மார்கன் சமீபகாலமாக காட்டுத்தனமாக ஆடி வருகிறார். ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரசல் பற்றி சொல்லவே தேவையில்லை.

Advertisement