ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் வெளிநாடுகளில் ஷிகர் தவான் அமைத்த டாப் 3 பார்ட்னர்ஷிப் – லிஸ்ட் இதோ

Virat Kohli Shikhar Dhawan
- Advertisement -

2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் புத்தாண்டில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர அனுபவ வீரர் சிகர் தவான் கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த 2010இல் அறிமுகமாகி ஆரம்பத்தில் தடுமாறிய அவரது திறமையை உணர்ந்த அப்போதே கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறக்கி புதிய ஓபனிங் ஜோடி அறிமுகப்படுத்தினார். அதில் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருதை வென்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர மானசீக பார்ட்னராக அவதரித்தார்.

அதன் பின் அதிரடியாக ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சச்சின் – கங்குலி ஆகியோருக்கு பின் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த இந்திய ஜோடியாக சாதனை படைத்தது. அதில் 2015 உலக கோப்பையில் 400+ ரன்கள், 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் தங்க பேட் விருது வென்ற தவான் 2018 ஆசியக் கோப்பை மற்றும் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு நிதியாஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சிறந்த பார்ட்னர்ஷிப்:
ஆனால் 2019 உலகக்கோப்பையில் காயத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து வெளியேறிய அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ராகுல் சற்று சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தனதாக்கினார். மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து வந்த தவான் பழைய பன்னீர்செல்வத்தை போல் அதிரடியாக செயல்பட முடியாமல் தவிப்பதுடன் 37 வயதை கடந்து விட்டதால் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இருப்பினும் மிஸ்டர் ஐசிசி என பெயரெடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள அவர் ரோகித் சர்மாவுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் பற்றி அனைவரும் அறிவோம். ஆனால் தமது மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திரம் விராட் கோலியுடன் வெளிநாடுகளில் அவர் அமைத்த 3 மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

3. 158, ஜொகனஸ்பெர்க்: கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 5 – 1 (7) என்ற கணக்கில் விராட் கோலி தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் வாண்ட்ரஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அவுட்டானாலும் அடுத்து வந்த விராட் கோலியுடன் கைகோர்த்த ஷிகர் தவான் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

தொடர்ந்து அசத்திய அவர் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 109 (105) ரன்கள் குவித்து விராட் கோலியுடன் 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டானார். அதில் விராட் கோலி 75 ரன்கள் எடுத்ததால் இந்தியா 289/7 குவித்தாலும் இறுதியில் மழையால் குறைவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை துரத்தி தென்னாபிரிக்கா வென்றது.

- Advertisement -

2. 197*, தம்புல்லா: கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் இலங்கை எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 5 – 0 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தம்புல்லா மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 217 ரன்களை துரத்தும் போது ரோகித் சர்மா 4 ரன்னில் அவுட்டானார்.

ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்து இலங்கை பவுலர்களை பந்தாடிய ஷிகர் தவான் 20 பவுண்டரி 3 சிக்ஸருடன் 132* (90) ரன்களும் விராட் கோலி 10 பவுண்டரி 1 சிக்சருடன் 82* (70) ரன்களும் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக கடினமான பிட்ச்சில் அவர்கள் அமைத்த 197* ரன்கள் பார்ட்னர்ஷிப் தரமானதாக இருந்தது.

- Advertisement -

1. 212, கான்பெரா: 2016இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் போராடி தோற்றது. குறிப்பாக கான்பெராவில் நடைபெற்ற 4வது போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 349 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா அதிரடியாக 41 (25) ரன்கள் குவித்து அட்டானார். அவருக்கு பின் ஜோடி சேர்ந்து வெளுத்து வாங்கிய ஷிகர் தவான் சதமடித்து 126 (113) ரன்களும் விராட் கோலி 106 (92) ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: 2022இல் சொதப்பிய இந்திய அணி – டிராவிட், லக்ஷ்மன், ரோஹித்தை வெளுக்கும் பிசிசிஐ, வெளியான தகவல் இதோ

குறிப்பாக 2வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த அந்த ஜோடியின் போராட்டத்தை வீணடிக்கும் வகையில் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 49.2 ஓவரில் 323 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Advertisement