1990 களில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி இன்றுவரை ஓய்வை அறிவிக்காமல் விளையாடி வரும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Gayle
- Advertisement -

சமீப ஆண்டுகளில், கிரிக்கெட் விளையாட்டு முற்றிலும் மாறிவிட்டது. விளையாட்டின் பெரும்பாலான மாற்றங்கள் அதற்கு உலகளாவிய மதிப்பையையும் தாக்கத்தையும் கொடுத்துள்ளன. கடந்த 1990 ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் அறிமுகமான வீரர்கள் பலர் சிறப்பான கிரிக்கெட் கேரியரை பெற்று உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஓய்வு பெற்றுவிற்ற நிலையில் ஆனால் அவர்களில் ஒரு சிலர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுைபெறாமல் இன்னும் ஆடி வருகின்றனர். அப்படி 1990களில் சர்வதேச அளவில் அறிமுகமாகி இன்னும் ஓய்வு பெறாத 3 கிரிக்கெட் வீரர்கள் பற்றி பார்ப்போம்.

gayle

- Advertisement -

1. கிறிஸ் கெய்ல் :

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான 40 வயது உடைய பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். அவரது ஆக்ரோஷ பேட்டிங் காரணமாக அவர் ‘யுனிவர்ஸல் பாஸ்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கிறிஸ் கெய்ல் டொராண்டோவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக செப்டம்பர் 11, 1999 அன்று சர்வதேச அளவில் அறிமுகமானார்.
அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் தனது அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள், 300 ஒருநாள் மற்றும் 52 டி 20 போட்டிகளில் விளையாடினார். இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் இன்னும் டி20 வடிவ அணியில் ஒரு பகுதியாக இருக்கிறார்.மேலும் இன்னும் இரண்டு டி20 உலககோப்பையில் ஆடுவேன் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

Harbhajan

2. ஹர்பஜன் சிங் :

- Advertisement -

இந்தியாவுக்காக விளையாடிய மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹர்பஜன் சிங், 90களில் அறிமுகமான வீரர்களில் ஒருவர். ஏப்ரல் 17, 1998 அன்று நியூசிலாந்திற்கு எதிராக ஹர்பஜன் சிங் சர்வதேச அளவில் அறிமுகமானார். அதன்பிறகு ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 28 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்டில் 417, ஒருநாள் போட்டியில் 269, மற்றும் டி20யில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது கடைசி சர்வதேச போட்டியை 3 மார்ச் 2016 அன்று விளையாடிய போதிலும், அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவிக்கவில்லை.

malik

3. சோயிப் மாலிக் :

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக் 90களில் அறிமுகமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஷார்ஜா ஒருநாள் போட்டிக்கு எதிராக ஷோயப் மாலிக் அக்டோபர் 14, 1999 அன்று சர்வதேச அளவில் அறிமுகமானார்.
அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் 35 டெஸ்ட், 287 ஒருநாள் மற்றும் 113 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சோயிப் மாலிக் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் இன்னும் டி20 போட்டிளில் தீவிரமாக ஆடி வருகிறார்.

Advertisement