நேற்றைய போட்டியில் மும்பை அணி செய்த 3 தவறுகள். தோல்விக்கு அதுவே காரணம் – ஓர் அலசல் இதோ

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தத் தொடரில் இது இரண்டாவது தோல்வியாகும். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்வியைப் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பை அணி இந்த தொடரில் விளையாடியுள்ள 4 போட்டிகளிலுமே 160 ரன்கள் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறது. இப்படி மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய 3 காரணங்கள் இதோ :

sky

டாப் ஆர்டர் நிலைப்பின்மை :

மும்பை அணியின் டாப் ஆர்டரில் விளையாடிக்கொண்டிருக்கும் கேப்டன் ரோகித் சர்மாவும் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவிற்கும் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல தொடக்கம் அமைகிறது. ஆனால் அவர்கள் அந்த தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்றாமல் முக்கியமான நேரங்களில் தேவையே இல்லாத ஷாட்களை ஆடி தங்களது விக்கெட்டை இழந்து விடுகின்றனர். இந்த இருவரும் அவுட் ஆனதும் மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுப்பதால் மும்பை அணியால் ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. நேற்றைய போட்டியிலும் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் நல்ல தொடக்கம் அமைந்தது. ஆனால் அவர்கள் அதை பெரிய ஸ்கோராக மாற்றாமல் அவுட்டாகி வெளியேறினர். இதனால் அந்த அணியால் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

mishra

மிடில் ஆர்டர் சொதப்பல் :

- Advertisement -

இந்த தொடர் தொடங்கியதிலிருந்தே மும்பை அணியின் மிகப்பெரிய பலகீனமாக பார்க்கப்படுவது அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை தான். இன்னும் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக விளங்கும் ஹர்டிக் பண்டியா, பொல்லார்ட் மற்றும் க்ருணால் பாண்டியா தங்களது திறமையை நிரூபிக்கவில்லை. நேற்றைய போட்டியிலும் அலட்சியமாக ஆடிய இந்த மூன்று பேரும் விரைவிலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இம்மூன்று பேரும் இணைந்து நேற்று அடித்த ரன்கள் வெறும் 3 மட்டுமே. இவர்களில் யாரேனும் ஒருவர் சிறப்பாக விளையாடியிருந்தாலும் மும்பை அணி ஒரு நல்ல டார்கெட்டை டெல்லி அணிக்கு செட்செய்திருக்கும். ஆனால் இம்மூவரும் சோபிக்கத் தவறிவிட்டனர்.

dekock

குயின்டன் டிகாக் vs சென்னை மைதானம் :

சென்னை ஆடுகளத்தில் பேட்டிங் விளையாடுவதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டீ காக். இதுவரை அவர் சென்னை மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். இந்த ஆடுகளத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே 49 ரன்கள் அடித்து தனது திறமையை நிரூபித்த கிறிஸ் லின்னிற்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பு வழங்காமல் இப்படி பேட்டிங் ஆடவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் குயின்டன் டீ காக்கிற்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது மும்பை அணி நேற்றைய போட்டியில் தோற்றதற்கு முக்கிய்காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் 4 பந்துகள் விளையாடிய டீ காக் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார்.