தோனிக்கு பிறகு சி.எஸ்.கே அணியின் கேப்டனாக வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Dhoni

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் தொடர் என்றாலே அதில் மிக வலுவான அணியாக பார்க்கப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். ஐபிஎல் தொடர்களில் இதுவரை மூன்று முறை கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது அந்த அணி. இப்படி ஐபிஎல் தொடரில் ராஜநடைபோட்டு வரும் அந்த அணியின் மிக முக்கிய பலமாக திகழ்கிறார் அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோணி. ஒவ்வொரு ஐபிஎல் தொடரின்போதும், தனது அற்புதமான கேப்டன்சியை வெளிப்படுத்தும் தோணிக்கு தற்போது 40 வயதாவதால், அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhoni

தோணி ஓய்வு பெறும்போது சென்னை அணிக்காக நிச்சயமாக ஐபிஎல் கோப்பையை வென்று தந்துவிட்டுதான் செல்வார் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்தான், இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது கொரானா காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறுமா இல்லையா என்று தெரியாததால், நிச்சயாமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோணி விளையாடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஐபிஎல் தொடரில் சென்னை அணியை மிக அற்புதமாக வழிநடத்திய மகேந்திர சிங் தோணிக்கு பிறகு, அந்த அணியை யார் வழி நடத்தப் போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தோணிக்குப் பிறகு சென்னை அணியை வழிநடத்த தகுதி வாய்ந்த மூன்று வீரர்களை நாங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

Jadeja

ரவீந்திர ஜடேஜா:

இந்திய அணிக்கு மட்டுமில்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பேட்டிங், பௌலிங், பீல்டிங் என தனது அற்புதமான ஆல்ரவுண்டர் திறைமையை வெளிப்படுத்தி வரும் ரவீந்திர ஜடேஜா, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள ஜடேஜா, பல முறை தனது ஆல்ரவுண்டர் திறமையினால் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் ஒரு பௌலராகவும் இருப்பதால் ஜடேஜாவால், சென்னை அணியை மிகச் சிறப்பாக வழி நடத்த முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரை 191 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2290 ரன்களை அடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் 120 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார்.

- Advertisement -

Raina

சுரேஷ் ரெய்னா:

மகேந்திர சிங் தோணியுடன் 2008ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமானவர் தான் சுரேஷ் ரெய்னா. சென்னை ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் இவரே, தோணியால் விளையாட முடியாமல் போன அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரின்போதும் சென்னை அணிக்காக தனது நிலையான பங்களிப்பை வழங்கி வரும் இவருக்கே, தோணிக்கு பிறகு அந்த அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பு செல்ல அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஐபிஎல் தொடர்களில் 195 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, 5491 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

gaikwad

ருத்துராஜ் கெய்க்வாட்:

சென்ற ஆண்டு இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லையென்று தோணி கூறியதை பொய்யாக்கும் விதமாக, தனது அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி காட்டிய 24 வயதேயான ருத்துராஜ் கெய்க்வாட், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டியில் சொதப்பினாலும், அதற்குப் பின்பு வந்த போட்டிகளில் எல்லாம் அதிரடி காட்டி தன்னிடம் ஸ்பார்க் உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்தார். முதல் மூன்று போட்டியிலும் சரியாக விளையாடாத இவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு உத்தப்பாவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோதும், மகேந்திர சிங் தோணியும், அந்த அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃப்ளமிங்கும் அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு தொடரந்து வாயப்புகள் வழங்கினர். எதிர்கால சென்னை அணியை வலுவாக கட்டமைக்க ருத்துராஜ் கெய்க்வாட் தேவை என்று முடிவெடுத்து சென்னை அணி நிர்வாகம், அவருக்கு கேப்டன் பொறுப்பையும் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ருத்துராஜ் ஏற்கனவே விஜய் ஹசாரே தொடரில், மஹாராஸ்டிரா அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement