தேவ்தத் படிக்கலுக்கு பதிலாக அவரது இடத்தை நிரப்ப காத்திருக்கும் 3 ஓப்பனர்கள் – லிஸ்ட் இதோ

padikkal

14ஆவது ஐபிஎல் தொடர் நாளை சென்னையில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் மோத இருக்கின்றன. இந்நிலையில் படிக்கல் சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆலானர். நேற்று படிக்கல் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து விட்டார் என தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் நாளை மறுநாள் நடக்க இருக்கின்ற முதல் போட்டியில் அவர் வருவாரா மாட்டாரா என்பது குறித்து சந்தேகம் நிலவி வருகிறது.

ஒருவேளை படிக்கல் விளையாடாமல் போனால் அவருக்கு மாற்றாக எந்த வீரர் களமிறங்குவார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். படிக்கல்லுக்கு மாற்றாக விளையாட போகும் அந்த மூன்று வீரர்களைப் பற்றி பார்ப்போம் ;

முகமது அசாருதீன் :

Azharudeen

கேரளா அணிக்காக சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் நன்றாக விளையாடி வந்த முகமது அசாருதீன் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அந்த தொடரில் அவர் 5 போட்டிகளில் விளையாடி 214 ரன்கள் குவித்தார். அவரது அவரைச் 53.50 ஆகும். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 194.54 ஆகும். மிக அதிரடியாக ஆடி ஆடக்கூடிய வீரரான முகமது அசாருதீன் நிச்சயமாக ஓபனிங் விளையாட தகுதியானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஓபனிங் ஆடுவதன் மூலம் பவர் பிளே ஓவர்களில் அணிக்கு நல்ல வகையில் ரன்களை அடித்து கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

finn allen

- Advertisement -

பின் ஆலன் :

நியூசிலாந்தைச் சேர்ந்த பின் ஆலன், சமீபத்தில் நடந்த பங்களாதேஷிற்கு எதிரான டி20 தொடரில் மிக அதிரடியாக ஆடி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதிலும் குறிப்பாக ஒரு போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்கள் அடித்து பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களை கதி கலங்க வைத்தார். அந்தப் போட்டியில் வெறும் 18 பந்துகளில் தனது அரை சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயமாக படிக்கல் ஆடாத பச்சத்தில் பின் ஆலனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் ஓபனிங் ஆட வைக்கும். விராட் கோலியுடன் இவர் ஆடும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ராஜட் பட்டிடர் :

மத்தியபிரதேச அணிக்காக விளையாடி வருபவர் ராஜட் ஆவார். சையது முஷ்டாக் அழி டிராபி தொடரில் இவரது ஆட்டம் மிக அபாரமாக இருந்தது. வெறும் 29 பந்துகளில் 68 ரன்கள் அடித்து தனது பேட்டிங் திறமையை அந்த தொடரில் அவர் நிரூபித்தார்.பட்டிடர் இதுவரை 23 டி20போட்டிகளில் விளையாடி 699 உங்களை குவித்துள்ளார். இவரது ஆபரேட் 35 மற்றும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 143.5 ஆகும்.

மேலும் சமீபத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கான பயிற்சி ஆட்டத்தில் 35 பந்துகளில் 54 ரன்கள் அடித்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகத்திடம் இருந்து நல்ல பெயர் எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய வீரரை களம் இறக்கும் பட்சத்தில் படிக்கல்லுக்கு மாற்றாக ராஜத் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.