மோர்கனுக்கு பதிலாக கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Morgan

கொரானா காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்ப்பட்டிருந்த இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை வருகிற செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடத்தும் முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ. நேற்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில் இந்த முடிவானது எடுக்கப்பட்டு அதற்காக ஐக்கிய அமீரகத்தின் ஒப்புதலையும் பெற்றிருப்பதாக அதிகாரப் பூர்வமான அறிப்பும் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால் அதில் இங்கிலாந்து நாட்டு வீரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இதற்கு முன்னராகவே அறிவித்திருந்தார் அந்நாட்டு கிரிக்கெட் போர்டின் தலைவரான ஆஷ்லே கைல்ஸ். எனவே மீண்டும் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இயான் மோர்கன் நிச்சயமாக கலந்து கொள்ள மாட்டார் என்று தெரியவந்திருக்கிறது. எனவே அவருக்குப் பதிலாக அந்த அணியின் கேப்டன் பொறுப்பு வேறு ஒரு வீரருக்கு செல்லும் நிலமை ஏற்பட்டிருக்கிறது. இந்த பதிவில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பிருக்கும் மூன்று வீரர்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

cummins 1

பேட் கம்மின்ஸ்:

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பௌலரான பேட் கம்மின்ஸ், கடந்த சில ஐபிஎல் சீசன்களாகவே கொல்கத்தா அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலிருந்தே பௌலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறார். மேலும் தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பையும் பேட் கம்மின்ஸிடம் ஒப்படைப்பதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மீண்டும் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸை நியமிக்கவே அந்த அணி நிர்வாகம் விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

russell

ஆண்ட்ரே ரஸல்:

- Advertisement -

2019-2020இல் நடைபெற்ற பங்களேதேஷ் ப்ரீமியர் லீக்கில், ராஜ்சாஷி ராயல்ஸ் அணியை மிகச் சிறப்பான முறையில் வழி நடத்தி சென்றிருக்கிறார் ஆண்ட்ரே ரஸல். மேலும் தனது சிறப்பான கேப்டன்சியால் அந்த தொடரின் கோப்பையையும் ரஜ்சாஷி ராயல்ஸ் அணி கைப்பற்ற மிக முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாகவே கொல்கத்தா அணிக்காக ஆண்டரே ரஸலால் சிறப்பாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். இருந்தாலும் இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே சில போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து சென்றிருக்கிறார் என்பதையும் மறுத்து ஒதுக்கிவிட முடியாது. ஏற்கனவே ஒரு உள்ளூர் தொடரில் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றி கொடுத்திருப்பதால், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு செல்வதற்கும் அதிகமான வய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை ஆண்ட்ரே ரஸல் கேப்டனாக நியமிக்கப்பட்டால், கொல்கத்தா அணியை எஞ்சியிருக்கும் போட்டிகளில் சிறப்பாக வழிநடத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Karthik

தினேஷ் கார்த்திக்:

கொல்கத்தா அணியின் கேப்டனாவதற்கு மற்ற இருவரை விடவும் தினேஷ் கார்த்திக்கிற்குத்தான் அதிக வாயு்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு அந்த அணியை வழிநடத்திய அனுபவமும் இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகி இருந்தாலும், அணியில் உள்ள ஒரு வீரராக தனது பங்களிப்பை தவறாமல் அளித்து வருகிறார். மேலும் ஒரு இந்திய வீரரை கேப்டனாக நியமித்தால் அந்த அணியால் மேலும் ஒரு வெளிநாட்டு வீரரை பதினோரு பேர் கொண்ட அணியில் இணைத்துக் கொள்ள முடியும். இந்த முடிவால் அந்த அணியின் பலமும் கூடும் என்பதால், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை தினேஷ் கார்த்திக் வழிநடத்துவதை நாம் மீண்டும் காணலாம்.

Advertisement