இந்தாண்டோடு ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்லவுள்ள 3 முன்னணி வீரர்கள் – லிஸ்ட் இதோ

2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பிசிசிஐ தலைமையில் மிக வெற்றிகரமாக 13 ஐபிஎல் தொடர்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 14வது ஐபிஎல் தொடர் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 30ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற வாய்ப்புள்ள முக்கியமான 3 வீரர்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

Dhoni

மகேந்திர சிங் தோனி :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை மிக வெற்றிகரமாக அணியை வழிநடத்தி ஆடி வந்தவர் மகேந்திர சிங் தோனி ஆவார். இதுவரை 182 போட்டிகளில் மகேந்திர சிங் தோனி விளையாடியுள்ளார். மொத்தமாக 4632 ரன்களை குவித்துள்ளார்,அவரது அதிகபட்ச ஸ்கோர் 84 ஆகும். மொத்தமாக 23 அரை சதங்கள் அடித்துள்ள மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் ஆவரேஜ் 40.99 ஆகும். மேலும் அவர் ஸ்டிரைக் ரேட் 136.76 ஆகும்.

இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகள் அனைத்திலும் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட தோனி 14 மாதங்கள் கழித்து சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் விளையாட வந்தார். மொத்தமாக 14 ஆட்டங்களில் விளையாடிய மகேந்திர சிங் தோனி 200 ரன்கள் மட்டுமே அடித்தார். போன சீசனில் அவரது பேட்டிங் அவரேஜ் 25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 116.27 ஆகும். இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடர் விளையாட மாட்டீர்களா என்று கேட்ட கேள்விக்கு, நிச்சயமாக இல்லை என்று பதில் அளித்த தோனி அனேகமாக இந்த ஆண்டுடன் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்வார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Harbhajan

- Advertisement -

ஹர்பஜன் சிங் :

2008ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன்சிங், 2017ம் ஆண்டு உடன் தனது மும்பை பயணத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு முதல் சென்ற ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். சென்ற ஆண்டு சென்னை அணியுடனான பயணத்தை முடித்துக்கொண்ட ஹர்பஜன் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக புதிதாக களமிறங்க உள்ளார்.

ஹர்பஜன்சிங் இதுவரை 157 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது பௌலிங் அவரேஜ் சராசரியாக 26.45 மற்றும் அவரது எக்கானமி 7.05 ஆகும். இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆட உள்ளார் ஹர்பஜன் இந்த ஆண்டுடன் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அடுத்த ஆண்டு மெகா ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளது. ஏலத்தில் நாற்பது வயதைக் கடந்து விட்டால் ஹர்பஜன் சிங்கை அணிகள் கைப்பற்ற யோசிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு அவர் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tahir

இம்ரான் தாஹிர் :

2014 ஆம் ஆண்டு டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரை ஆரம்பித்த இம்ரான் தாகிர், அதன் பின்னர் 2017ம் ஆண்டு ரைசிங் புனே அணிக்காக விளையாடினார். அதற்குப் பின்னர் 2018ம் ஆண்டு தொடங்கி இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்து கொண்டிருக்கிறார்.

58 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உலகில் இதுவரை 80 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவரது பௌலிங் அவரேஜ் 21.10 மற்றும் அவரது பவுலிங் எக்கானமி 7.83 ஆகும். 2019ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இம்ரான் தாஹிர் அந்த சீசனில் மொத்தமாக 26 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பில் கேப்பை வென்றார். இருந்த போதிலும் அதற்கு அடுத்த ஆண்டான சென்ற ஆண்டு ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 42 வயதை கடந்துவிட்ட இம்ரான் தாஹிர் இந்த ஆண்டுடன் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்வார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.