சி.எஸ்.கே அணி தக்கவைக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான். தோனி இந்த லிஸ்ட்ல இல்ல – விவரம் இதோ

CSK-1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13வது ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டது. இதன் காரணமாக அடுத்த பத்து வருடங்களுக்கான அணியை கட்டமைக்க வேண்டும் என்று கடைசி போட்டியின் போது அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியிருந்தார். குறிப்பாக அடுத்த வருடத்தில் 3 வீரர்களை மட்டும் தான் தக்க வைக்க முடியும். அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்க முயற்சிக்க போகும் வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம் .

chahar

தீபக் சாஹர் :

இவர் சி.எஸ்.கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த மூன்று வருடங்களாக மிக சிறப்பாக விளையாடி வருகிறார். சென்னை அணிக்காக மட்டும் 40 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது இவருக்கு 28 வயதுதான் ஆகிறது. இவர் அடுத்த ஏழு வருடங்களுக்கு மிக நன்றாக விளையாட வாய்ப்பு இருக்கிறது. அனுபவம் அதிகமாகி விட்டால் கண்டிப்பாக ஜஸ்பிரித் பும்ரா போன்று ஒரு பந்து வீச்சாளராக வர இருக்கிறது வாய்ப்பு இருக்கிறது.

சாம் குர்ரான் :

- Advertisement -

இவர் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆவார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடம் மிகச் சிறப்பாக தனது செயல்பாட்டை காட்டியதால் அடுத்த வருடமும் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கவும். மேலும் டிவைன் பிராவோ கடந்த சில வருடங்களாக தொடர்ந்து காயம் அடைந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மாற்றான வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டுபிடித்துவிட்டது.

இவருக்கு தற்போது 28 வயதாகிறது. கண்டிப்பாக அடுத்து பத்து வருடத்திற்கு விளையாட முடியும். இதன் காரணமாக கண்டிப்பாக இவரையும் அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது அறையில் தக்க வைத்துக்கொள்ளும்.

ரவீந்திர ஜடேஜா :

சமீபகாலமாக ஓரளவுக்கு நன்றாக ஆடி வரும் ஜடேஜா தற்போது தனது பேட்டிங்கயும் மெருகேற்றி விட்டார். இந்த வருட ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் மிகச் சிறந்து விளங்கினார். இதன் காரணமாக சென்னை அணி இதனால் இவரையும் தக்கவைக்க யோசிக்காது என்று தெரிகிறது.