கோலிக்கு அடுத்து வருங்கால இந்திய அணிக்கு கேப்டனாக தகுதியுள்ள 3 இளம்வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆதிக்கம் செலுத்திய அணிகளான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தற்போது அடங்கிப்போன சூழ்நிலையில் இருக்க, மாடர்ன் டே கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட அதிக ஆதிக்கம் செலுத்தும் அணியாக உருவெடுத்துள்ளது இந்திய அணி. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வகையான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணிக்கு, கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக திறமை வாய்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்து வருகின்றனர். இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை தவிர திறமை வாய்ந்த பல இளம் வீரர்களும், இந்திய அணிக்காக விளையாடப்போகும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர். இப்படி இளம் வீரர்களை உருவாக்குவதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்தி வரவில்லை, இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய கேப்டன்களையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கியே வந்துள்ளது.

சவுரவ் கங்குலிக்குப் பிறகு மகேந்திர சிங் தோணி என்ற மகத்தான வீரரிடம் கேப்டன் பொறுப்பை வழங்கிய இந்திய கிரிக்கெட் நிர்வாகம், அவருக்குப் பிறகு இக்காலக்கட்டத்தின் சிறந்த வீரரான விராட் கோலியிடம் கேப்டன்சியை ஒப்படைத்து, இந்திய கிரிக்கெட் அணியை மிகப் பெரிய அளவில் உயர்த்தியிருக்கிறது. இப்படி கிரிக்கெட் உலகில் தலைசிறந்த அணியாக விளங்கும் இந்திய அணியை, எதிர் வரும் காலத்தில் வழிநடத்தப்போகும் வீரராக யார் இருக்கப் போகிறார் என்பதை கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

rahul 1

கே எல் ராகுல்:

2014 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான கே எல் ராகுல், ஆரம்பத்தில் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக மட்டுமே பார்க்கப்பட்டார். இதற்கிடையில் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் மிடில் ஆர்டரில் விளையாட சரியான பேட்ஸ்மேன் கிடைக்காததால், தடுமாறியது இந்திய அணி. அப்போது ஐபிஎல் தொடர்களில் தனது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய கே எல் ராகுலுக்கு, இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், தற்போது ஒரு நாள் போட்டிகளில் மிடில் ஆர்டரிலும் டி20 போட்டிகளில் ஓப்பனிங்கிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் எந்த இடத்தில் களமிறங்கினாலும் அந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் ராகுலிடம், எப்போதும் இந்திய அணியின் சமநிலைத் தன்மையை தக்கவைத்துக் கொள்ளும் திறமை இருப்பதால், வருங்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வரும் அவரால், இந்திய அணியையும் சிறப்பாக வழி நடத்த முடியும்.

- Advertisement -

Pant-4

ரிஷப் பன்ட்:

தனது மந்தமான கீப்பிங் செயல்பாடு மற்றும் பொறுப்பற்ற பேட்டிங் தன்மையின் காரணமாக அதிகமான விமர்சத்தனத்திற்கு ஆளான ரிஷப் பன்ட், அதனை சரிசெய்து கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அனைவரின் பாரட்டுகளையும் பெற்றார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் கடந்த இங்கிலாந்து தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியில் தனது இடத்தையும் உறுதி செய்து கொண்டார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை அற்புதாக வழிநடத்தி அந்த அணியை புள்ளிகள் பட்டியலில், முதலிடத்திலும் இடம் பெற வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பன்ட்டிற்கு தற்போது 23 வயது தான் ஆவதால், இனிவரும் காலங்களில் இந்திய அணியில் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடினால் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Iyer

ஸ்ரேயாஸ் அய்யர்:

இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு இளம் வீரரான இவர், ஒரு நாள் போட்டிகளில் 44.83 என்ற சராசரியில் விளையாடி இருக்கிறார். இந்திய அணியில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்ரேயாஷ் அய்யர், ஐபிஎல் தொடர்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். 2018ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக கேப்டன்சியில் மோசமாக செயல்பட்ட கம்பீர், அந்த பதவியில் இருந்து விலக, பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஸ்ரேயாஷ். அவருடைய தலைமையிலான டெல்லி அணி 2020 ஐபிஎல் சீசினில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது. இப்படி ஐபிஎல்லில் ஒரு சிறந்த கேப்டனாகவும், சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு நிலையான ஆட்டத்தையும் அளித்து வரும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தான், எதிர்கால இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு மற்ற இருவரை விட அதிகமாக உள்ளது.

Advertisement